மாருதி ஸ்டிங்ரே காரின் படங்கள்: கிராண்ட் ஐ10க்கு போட்டி தருமா?
நாளை மறுதினம் மாருதி ஸ்டிங்ரே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக டீலர் யார்டுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்டிங்ரேவை படம் பிடித்து ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர் ஆட்டோமொபைல் பிரியர்கள்.
மாருதியின் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் வேகன் ஆர் காரின் பிரிமியம் மாடலாக வரும் ஸ்டிங்ரே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இறக்கப்படுகிறது. இந்த நிலையில், மாருதி பிரியர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும், இந்த காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காகவும் ஸ்டிங்ரே படங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு
தற்போது விற்பனை செய்யப்படும் வேகன் ஆர் காரைவிட வசீகரமான முகப்பை இந்த கார் கொண்டிருக்கிறது.

ஹெட்லைட்
முகப்பில் முக்கிய மாற்றமாக புரொஜெக்டர் ஹெட்லைட்டை கூறலாம். பிரிமியம் கார்களில் காணப்படும் இந்த புரொஜெக்டர் ஹெட்லைட் தற்போது ஸ்டிங்ரேவில் வருகிறது.

குரோம் பூச்சு
பின்பக்க டெயில் கிளஸ்ட்டர் குரோம் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

இன்டிரியர்
கருப்பு நிறத்திலான டேஷ்போர்டு, ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதிகொண்ட ரியர் வியூ கண்ணாடிகளை கொண்டிருக்கும்.

அலாய் வீல்
இந்த காரின் அலாய் வீல் கன்மெட்டல் பினிஷ் கொண்டதாக இருக்கும். ஸ்டிங்ரேவில் 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்த ஆண்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை
இப்போதைய வேகன் ஆர் காரைவிட ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
படங்கள் உதவி: Bosch Blogspot and Autos Arena


Click it and Unblock the Notifications








