800சிசி எஞ்சினுடன் புதிய மாருதியின் புதிய ஏ-ஸ்டார் - விபரம்
அடுத்த ஓர் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது மாருதி. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் மாடலாக இருக்கும்.
இதுதவிர, டீசல் மாடலிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே, தற்போது ஆட்டோமொபைல் துறையின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது மாருதியின் புதிய டீசல் ஹேட்ச்பேக் கார்.

புதிய ஏ- ஸ்டார்
ஒய்எல்- 7 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்படும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் ஏ-ஸ்டார் அல்லது ஸென் எஸ்டீலோவுக்கு மாற்று மாடலாக இருக்கும்.

ஏற்றுமதி
இந்தியாவில் ஏ- ஸ்டார் கார் அயல்நாட்டு மார்க்கெட்டுகளில் ஆல்ட்டோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மாருதியின் ஏற்றுமதி ஆல்ட்டோ மாடலாக வெளிவரும்.

சிறிய டீசல் கார்
முதலில் பெட்ரோல் மாடலிலும், அடுத்த ஆண்டு இறுதியில் தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் 800சிசி டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர உள்ளது. இது விற்பனைக்கு வந்தால், செவர்லே பீட் காரைவிட மார்க்கெட்டிலேயே சிறிய டீசல் எஞ்சின் கொண்ட காராக பெயரெடுக்கும்.

800சிசி டீசல் எஞ்சின்
புதிய 800சிசி டீசல் எஞ்சின் லிட்டருக்கு 30கிமீ மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்பதும் இப்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

டீசல் மயம்
புதிய ஏ ஸ்டார் தவிர, ஓம்னி உள்ளிட்ட சிறிய ரக கார் மாடல்களிலும், மாருதி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மினி டிரக்கிலும் இந்த எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற புதிய மாடல்கள்
ஒய்எல்- 7 ஹேட்ச்பேக் கார் தவிரவும், ஒய்எல் 1 என்ற குறியீட்டுப் பெயரில் எஸ்எக்ஸ்4 செடான் காருக்கு மாற்றாக புதிய காரையும், ஒய்ஏடி என்ற பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியையும் மாருதி வடிவமைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








