ஸ்விப்ட்டுக்கு தள்ளுபடி... மாருதி நிலைமையை பார்த்தீங்களா!!

Swift
மார்க்கெட்டில் எந்தவொரு கார் மாடலுமே எட்டாத உயரத்தை தொட்டு, பல சாதனைகளுக்கு சொந்தக்காரன் என்ற பெருமை மாருதியின் புதிய ஸ்விப்ட்டுக்கு உண்டு. மைலேஜ், தரம், வசதிகள், டிசைன் என அனைத்திலும் சிறந்த கார் என பெயர் வாங்கிய மாடல். மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் பலமும் ஸ்விப்ட்டை பல புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றது.

2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் புக்கிங்கில் புதிய சாதனைகளை பதிவு செய்தது. 1.08 லட்சம் பேர் ஸ்விப்ட்டுக்கு முன்பதிவு செய்து காத்திருப்பதாக கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியிருந்தோம். ஸ்விப்ட் டீசல் காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை நீண்டிருந்தது. இருந்தாலும், பரவாயில்லை என்று முன்பதிவு செய்து ஸ்விப்ட்டை தவம் கிடந்து வாங்கினர்.

இதெல்லாம், பழைய கதையாகிவிட்டது. தற்போது கார் விற்பனை படு மந்தமாகிவிட்டதால் மாருதி நிறுவனம் பெரும் நெருக்கடியில் தவிர்க்கிறது. சலுகை, தள்ளுபடி குறித்து இதுவரை வாய் திறக்காத மாருதி முதன்முறையாக ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்தது. ஆனால், அதற்கும் போதிய பலன் கிடைக்கவில்லை. எனவே, விற்பனையை உயர்த்துவதற்கு தற்போது சிறப்புச் சலுகைகளையும், தள்ளுபடியையும் அறிவித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரிட்ஸ் டீசல் காருக்கு ரூ.45,000 தள்ளுபடி வழங்குவதாக மாருதி அறிவித்தது. மேலும், ஸ்விப்ட்டை முன்பதிவு செய்தால் உடனடி டெலிவிரி கொடுக்கப்படும் என்று அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், ஸ்விப்ட் காருக்கு திடீரென தள்ளுபடியையும் மாருதி வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதனை மீசையில் மண் ஒட்டாத கதையாக மாருதி மறுத்துள்ளது. இருப்பினும், டீலர்களில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் முன்பதிவுகளுக்கு சில சலுகைகள் வழங்குவதாக மாருதி ஒப்புக்கொண்டிருக்கிறது. மும்பை, பெங்களூர் டீலர்களில் மாருதி டீலர்கள் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குவதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2013, 12:40 [IST]
English summary
Country's leading car maker Maruti's flagship model Swift is available at a discount for the first time since its launch, and there's no waiting for delivery.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+