பிக் பஸாரில் ஷாப்பிங் செய்தால் மாருதி எஸ்டீலோவை வெல்லும் வாய்ப்பு

நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான பிக் பஸாரில் மாதந்தோறும் 1ந் தேதி முதல் 8ந் தேதி வரை பட்ஜெட் பஸார் என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் பஸாரில் பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், "ஷாப் பிக், வின் பிக்" என்ற பெயரில் பம்பர் பரிசு திட்டத்தை மாருதியும், பிக் பஸாரும் இணைந்து அறிமுகம் செய்கின்றன.
இந்த சிறப்பு பரிசு திட்டத்தின்படி, பட்ஜெட் பஸாரில் அதிக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு எஸ்டீலோ கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
நாட்டிலுள்ள 81 பிக் பஸார் வணிக வளாகங்களுக்கும் இந்த பரிசு திட்டம் பொருந்தும் . இந்த பரிசு திட்டத்தில் வெற்றி பெறும் வாடிக்கையாளருக்கு மாருதி எஸ்டீலோ கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








