விரைவில் வருகிறது மாருதி வேகன்-ஆர் ஸ்டிங்ரே!

கவர்ச்சியான தோற்றம் கொண்ட வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை விரைவில் மாருதி அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட பல புதிய அம்சங்கள் கொண்ட இந்த வேகன்-ஆர் கார் தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதத்தில் இந்த அழகிய வேகன்-ஆர் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. வேகன்-ஆர் காருக்கு அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த புதிய டால் பாய் டிசைன் வேகன்-ஆர் ஸ்டிங்ரே கூடுதல் வாடிக்கையாளர் வட்டத்தை நிச்சயம் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

தோற்றம்

தோற்றம்

புரொஜெக்டர் ஹெட்லைட், அதற்கு இணையான முகப்பு கிரில், பெரிய ஏர்டேம், சைடு ஸ்கர்ட், புதிய அலாய் வீல்கள் ஆகியவை ஸ்டிங்ரேவுக்கு அதிக கவர்ச்சியை தருகிறது.

கருப்பு இன்டிரியர்

கருப்பு இன்டிரியர்

வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரின் இன்டிரியர் முழுவதும் கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரிலும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனே வரும். இந்த எஞ்சின் 67 பிஎச்பி ஆற்றலையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ஸ்பிளிட் இருக்கை

ஸ்பிளிட் இருக்கை

பின்புறத்தில் 60:40 என்ற விகிதம் கொண்ட மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

எல்பிஜி மாடல்

எல்பிஜி மாடல்

பெட்ரோல் தவிர எல்பிஜி மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் மாடல்களும் விற்பனைக்கு வரும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

 வேகன்-ஆருக்கு மாற்றா?

வேகன்-ஆருக்கு மாற்றா?

இந்த கார் வேகன்-ஆர் காருடன் சேர்த்து விற்பனை செய்யப்படுமா அல்லது மாற்றாக அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

அறிமுகம் உறுதி

அறிமுகம் உறுதி

இந்தியாவில் வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை வைத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு புதிய காருக்கு போட்டோ ஷூட் நடத்தப்பட்டால், அடுத்த ஓரிரு மாதங்களில் அந்த கார் விற்பனைக்கு வருவது வழக்கம். எனவே, இன்னும் இரண்டு மாதங்களில் வேகன்-ஆர் ஸ்டிங்ரே கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

விலை அதிகமிருக்கும்

விலை அதிகமிருக்கும்

தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்-ஆர் காரைவிட இந்த புதிய வேகன்-ஆர் ஸ்டிங்ரே ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில் கூடுதல் விலையில் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2013, 16:37 [IST]
English summary
The Wagon R hatchback, unlike the other hatchbacks sold in India, sports a tall boy design. This unique body style makes it very practical and reliable. While the Wagon R may not be the best selling car in India, it is still holds the number four spot and sales have been relatively steady even after more than a decade of existence.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+