எஸ்எக்ஸ்- 4க்கு மாற்றாக புதிய செடான்: மாருதி களமிறக்குகிறது

By Saravana

விற்பனையில் தட்டுத் தடுமாறி வரும் எஸ்எக்ஸ்4 காருக்கு மாருதி விரைவில் குட்பை சொல்கிறது. இதற்கு மாற்றாக புதிய செடான் காரை களமிறக்குகிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட கார்களுக்கு இது போட்டியாக இருக்கும். கூடுதல் பிரிமியம் அம்சங்களுடன் வரும் இந்த புதிய செடான் கார் குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

ஒய்எல்1 என்ற குறியீட்டுப் பெயரில் சோதனை செய்யப்பட்டு வரும் அந்த புதிய செடான் கார் டிசைன், வசதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கும். ஷாங்காய் மோட்டார் ஷோவில் வைக்கப்பட்டிருந்த கிஷாசிக்கு மாற்றாக வரும் ஆத்தென்டிக் கான்செப்ட் காரின் சில டிசைன் தாத்பரியங்களையும் கொண்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

எர்டிகாவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. முதலில் பெட்ரோல், டீசலிலும் பின்னர் சிஎன்ஜி மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.

டூயல் டோன் இன்டிரியர்

டூயல் டோன் இன்டிரியர்

பீயேஜ் மற்றும் கருப்பு நிற கலவை கொண்ட இன்டிரியரை கொண்டிருக்கும். மேலும், உயர் ரக கார்களில் காணப்படும் ஃபாக்ஸ் வுட் பினிஷிங் இந்த காரின் சென்ட்ரல் கன்சோல் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட்டிருக்கும்.

அம்சங்கள்

அம்சங்கள்

சோதனையின்போது எடுக்கப்பட்ட படங்களில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட சில பாகங்கள் அப்படியே கிசாஷி காரை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. டோர் ஹேண்டில்கள் போன்றவற்றில் குரோம் பூச்சு செய்யப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளையும் கொண்டிருக்கும்.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

இன்று ஸ்டிங்ரேவை தொடர்ந்து அடுத்து மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி. இதற்கடுத்து, இந்த ஆண்டு இறுதிவாக்கில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2013, 9:59 [IST]
English summary
Maruti Suzuki will replace the SX4 sedan with an all new car in Indian market soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+