மாருதியின் எக்ஸ்ஏ ஆல்ஃபா மினி எஸ்யூவி பற்றிய சிறப்பு தகவல்கள்

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் மாருதியின் புத்தம் புதிய மினி எஸ்யூவி கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்த இந்த புதிய மினி எஸ்யூவியை உற்பத்தி நிலை மாடலாக மாற்றும் பணியில் மாருதியின் வடிவமைப்பு நிபுணர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த புதிய மினி எஸ்யூவியின் சில முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவியின் டீசல் மாடல் பற்றிய தகவல்கள்தான் தற்போது கசிந்துள்ளன. பெட்ரோல் மாடல் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

குறியீட்டு பெயர்

குறியீட்டு பெயர்

இந்த புதிய மினி எஸ்யூவியை YAD என்ற குறியீட்டு பெயரில் மாருதி வடிவமைத்து வருகிறது.

வரிச்சலுகை

வரிச்சலுகை

இந்த காம்பெக்ட் எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டிருக்கும் என்பதால் 12 சதவீத வரிச்சலுகையை பெறும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எஸ்யூவியில் 5 பேர் அமர்ந்து செல்லலாம். மேலும், பின் இருக்கை 60:40 என்ற அளவில் மடக்கி விரிக்கும் வசதி கொண்டதாக இருக்கும்.

டீசல் வேரியண்ட்கள்

டீசல் வேரியண்ட்கள்

எக்ஸ்ஏ ஆல்ஃபாவை விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ+ ஆகிய மூன்று வேரியண்ட்களில் வரும். எனவே, டீசல் மாடல் குறைந்த விலை கொண்டதாக இருக்காது. வழக்கமான மாருதியின் பேஸ் வேரியண்ட்டான எல்டிஐ.,யில் வராது என்று தகவல்கள் கூறுகின்றன.

முன் இருக்கை

முன் இருக்கை

முன் இருக்கை டிசையரை ஒத்ததாக இருக்கும் என தெரிகிறது. டாப் வேரியண்ட்களில் மட்டுமே ஆர்ம் ரெஸ்ட் இருக்குமாம்.

வீல்பேஸ்

வீல்பேஸ்

4 மீட்டருக்குள் வரும் இந்த மினி எஸ்யூவி 2,500 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கும். எனவே, உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டிருக்கும்.

கம்பீரமான டயர்கள்

கம்பீரமான டயர்கள்

255/50 R19 டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த டயர்கள் எக்ஸ்ஏ ஆல்ஃபாவுக்கு ஓர் அசுரத்தனமான தோற்றத்தை கொடுக்கும்.

அளவு

அளவு

4 மீட்டர் நீளமும், 1.9 மீட்டர் அகலமும், 1.6 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும்.

உயரம் குறைவு

உயரம் குறைவு

டஸ்ட்டரை விட மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா எஸ்யூவி 95 மிமீ உயரம் குறைவானதாக இருக்கிறது. ஆனால், உற்பத்தி நிலை மாடலில் கூடுதல் உயரத்துடன் எக்ஸ்ஏ ஆல்ஃபா வரலாம் என தெரிகிறது.

டஸ்ட்டருக்கு பெருமூச்சு

டஸ்ட்டருக்கு பெருமூச்சு

இந்த எஸ்யூவியின் உற்பத்தி நிலை மாடல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிகிறது. மேலும், அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2015ம் ஆண்டு துவக்கத்திலோதான் இது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இப்போதைக்கு டஸ்ட்டர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு நெருக்கடி இருக்காது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2013, 12:14 [IST]
English summary
After the launch of EcoSport in India in a couple of months, the most awaited compact SUV will be Maruti’s XA-Alpha for sure. Through one of our sources we have got a few sneaking bits to share with all of you. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+