கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் விபரம்
கார் விற்பனையில் தொடர் சரிவு காணப்படுவதால் தயாரிப்பாளர்கள் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். ஒரு காருக்கு ஒரு கார் இலவசம், ஓர் ஆண்டுக்கு மாதத் தவணை கட்ட வேண்டாம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களுடன் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சலுகைகளை அதிகம் காட்டாத மாருதி நிறுவனமும் சலுகைகளை வாரி வழங்குகிறது. மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பாலான கார்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இதுவே சரியான தருணம் என்றும் கூறலாம். தற்போது கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாடா இண்டிகோ இசிஎஸ்
இண்டிகோ இசிஎஸ் செடான் காருக்கு ரூ.45,000 தள்ளுபடி கிடைக்கிறது.

டாடா மான்ஸா
மான்ஸா செடான் காருக்கு ரூ.20,000 தள்ளுபடி பெறலாம்.

டாடா ஆரியா
ஆரியா எம்பிவி காருக்கு ஒரு லட்சம் வரை தள்ளுபடி சலுகையை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

மஹிந்திரா ஸைலோ
ஸைலோ எச்-9 வேரியண்ட்டுக்கு ரூ.25,000 தள்ளுபடி கிடைக்கும்.

மாருதி எஸ்டீலோ
மாருதி எஸ்டீலோ காருக்கு ரூ.30,000 தள்ளுபடி பெறலாம்.

மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் சிஎன்ஜி காருக்கு ரூ.28,000 தள்ளுபடி பெறலாம்.

மாருதி ஆல்ட்டோ கே10
மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.20,000 தள்ளுபடி பெறலாம்.

மாருதி ஈக்கோ
மாருதி ஈக்கோ காருக்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாருதி எஸ்எக்ஸ்-4
மாருதி எஸ்எக்ஸ்-4 டீசல் காருக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.35,000 வழங்கப்படுகிறது. மொத்தமாக ரூ.70,000 மதிப்புடைய சலுகை வழங்கப்படுகிறது.

ஸ்விப்ட்
ஸ்விப்ட், ரிட்ஸ், டிசையர் மற்றும் எர்டிகா கார்களுக்கு 100 லிட்டர் டீசல் இலவசமாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறலாம்.

செவர்லே ஸ்பார்க்
செவர்லே ஸ்பார்க் காருக்கு ரூ.35,000 தள்ளுபடி கிடைக்கும்.

செவர்லே பீட்
செவர்லே பீட் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி பெறலாம்.

ஸ்கோடா ஃபேபியா
ஃபேபியா விற்பனையை இந்தியாவில் நிறுத்த ஸ்கோடா முடிவு செய்துள்ளது. இநத் நிலையில், இருப்பு இருக்கும் ஃபேபியா கார்களுக்கு அதிரடி சலுகைகளை ஸ்கோடா வழங்குகிறது. பெட்ரோல் மாடலுக்கு ரூ.36,000 தள்ளுபடியும், 2012ம் ஆண்டு மாடல் டீசல் ஃபேபியா கார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஸ்கோடா சூப்பர்ப்
2012 சூப்பர்ப் கார்களுக்கு ரூ.2 லட்சமும், 2013 மாடல் சூப்பர்ப் கார்களுக்கு ரூ.70,000 தள்ளுபடியும் பெறலாம்.

ஃபோக்ஸ்வேகன் பஸாத்
பஸாத் காருக்கு ரூ.2.5 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது ஃபோக்ஸ்வேகன்.

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா
ஜெட்டா காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது ஃபோக்ஸ்வேகன்.

ரெனோ ஃப்ளூயன்ஸ்
ஃப்ளூயன்ஸ் செடான் காருக்கு ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிசான் மைக்ரா
நிசான் மைக்ரா டீசல் காருக்கு சில டீலர்களில் ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிசான் சன்னி
சன்னியின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகை வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20
ஐ20 டீசல் மாடலுக்கு ரூ.18,000, பெட்ரோல் மாடலுக்கு ரூ.20,000 தள்ளுபடியாக பெறலாம்.

ஹூண்டாய் ஐ10
ஐ10 காரின் சில வேரியண்ட்களுக்கு ரூ.45,000 வரை தள்ளுபடி சலுகையாக பெறலாம்.

ஃபோர்டு கிளாசிக்
ஃபோர்டு கிளாசிக் காருக்கு ரூ.49,000 வரை சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

ஃபோர்டு ஃபிகோ
ஃபிகோவுக்கு ரூ.42,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சொகுசு கார்கள்
பிஎம்டபிள்யூ 520டி, ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் இ220 சிடிஐ சொகுசு செடான் கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆடி க்யூ7
ஆடி க்யூ-7 எஸ்யூவியின் 3.0 லிட்டர் டிடிஐ டீசல் மாடலுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சலுகையாக பெறலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவிக்கு ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








