அடுத்த வாரம் சிஎன்ஜி எர்டிகா அறிமுகம்!
அடுத்த வாரம் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட எர்டிகா மாடலை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் விற்பனை தொடர்ந்து சுணக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த மாதம் மாருதியின் விற்பனை 14.4 சதவீதம் குறைந்தது. போதாக்குறைக்கு சமீபத்தில் எர்டிகாவுக்கு போட்டியாக செவர்லே என்ஜாய் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த நெருக்கடிகளை சமாளிக்கும் விதமாக சிஎன்ஜியில் இயங்கும் எர்டிகாவை மாருதி களமிறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த புதிய எர்டிகா விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆகிய இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். இசட்எக்ஸ்ஐ டாப் வேரியண்ட்டில் சிஎன்ஜி கிட் கிடைக்காது. பெட்ரோல் மாடலை விட ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த புதிய எர்டிகா விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








