விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துடன் மஸ்தாவின் புதிய கார்!
விபத்தை தவிர்க்கும் வகையில், நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மஸ்தா காரின் சோதனைகள் இந்த மாதம் துவங்கப்பட உள்ளன. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நகரில் மஸ்தா அடென்ஸா ஏஎஸ்வி5 என்ற இந்த காரின் சோதனைகள் நடத்தப்பட இருக்கிறது.
இந்த காருக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை ஆட்டோமொபைல் துறை, கல்வித் துறை மற்றும் அரசுத் துறையினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். அக்டோபரில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஐடிஎஸ் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியிலும் இந்த காரின் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தின்படி, அருகில் வரும் வாகனங்களை சென்சார் மூலம் கண்காணித்தும், பிரத்யேக கருவிகள் மூலம் தொடர்பு கொண்டும் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும். ஹிரோஷிமா ஐடிஎஸ் ஆராய்ச்சி மையத்தினர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் தற்போது முதல் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








