வைப்பருக்கு குட்பை... மெக்லாரனின் அசத்தலான புதிய தொழில்நுட்பம்!!

கார்களில் நித்தம் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, வைப்பர் தொழில்நுட்பத்தில் இதுவரை பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வைப்பர் பிளேடு இல்லாமல் ஒலி அலைகளை பயன்படுத்தி கார் கண்ணாடியை சுத்தம் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை மெக்லாரன் உருவாக்கியுள்ளது. மிக அசத்தலான தொழில்நுட்பத்தின் சாதகங்கள், இது எங்கிருந்து மெக்லாரனுக்கு கிடைத்தது என்பது குறித்த சுவையான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை வைன்ட் ஸ்கிரீன் எனப்படும் முன்பக்க கண்ணாடியில் பாய்ச்சப்படும். இதன்மூலம், தண்ணீர், சேறு, தூசி, தும்பட்டிகள் கார் வைன்ட் ஸ்கிரீனில் படியாமல் இந்த ஒலி அலைகள் உடனுக்குடன் சுத்தம் செய்துவிடும். இந்த தொழில்நுட்பம் தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாவதாக பி13 காரிலும், தொடர்ந்து பிற கார் மாடல்களிலும் இந்த வைன்ட் ஸ்கிரீன்களை பொருத்த மெக்லாரன் திட்டமிட்டுள்ளது.

கூடுதல் மைலேஜ்

கூடுதல் மைலேஜ்

இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களில் வைப்பர் மோட்டார் இருக்காது என்பதால் காரின் எடை சற்று குறையும். காரின் ஏரோடைனமிக்ஸ் அதிகரிப்பதால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என மெக்லாரன் தெரிவித்துள்ளது.

 பாதிப்பு இருக்காது

பாதிப்பு இருக்காது

வைப்பர் பிளேடுகள் சரியாக பொருந்தவில்லையெனில், வைன்ட் ஸ்கிரீனில் கீறல்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, குளிர்காலங்களில் வைப்பர் பிளேடுகளால் கார் கண்ணாடியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த

ராணுவ நுட்பம்

ராணுவ நுட்பம்

இந்த தொழில்நுட்பம் தற்போது போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே மெக்லாரன் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா வந்த விதம்

ஐடியா வந்த விதம்

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மெக்லாரன் டிசைன் பிரிவு இயக்குனர் ஸ்டீபன்சன் கூறுகையில்," சில போர் விமானங்களின் வைன்ட் ஸ்கிரீனில் வைப்பர் பிளேடுகள் இல்லாதது குறித்து வியப்புடன் ஆராய்ந்தேன். அப்போதுதான், இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து தெரிய வந்தது. இந்த தொழில்நுட்பம் எந்தவொரு சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்கும். மேலும், இதற்கான தயாரிப்பு செலவீனமும் மிகவும் குறைவு," என்றார். மேலும், வைப்பர் பிளேடு தொழில்நுட்பம் மிகவும் பழமையானது, அதன் மறைவுக்கு நான் அஞ்சலி செலுத்த விரும்பவில்லை என்றும் கிண்டலாக கூறினார்.

வைப்பர் பிளேடு

வைப்பர் பிளேடு

கடந்த 1903ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த மேரி ஆண்டர்சன் என்ற பெண்மணிதான் வைப்பர் பிளேடு தொழில்நுட்பத்தை உருவாக்கினார் என்பது கொசுறுத் தகவல்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2013, 11:17 [IST]
English summary
McLaren could become the first company to completely do away with windscreen wipers in their cars. And this is not a rumor but comes from McLaren's chief designer Frank Stephenson. Speaking to Sunday Times recently, Stephenson revealed that the automaker is developing a technology that will make wipers irrelevant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+