பி1 ஹைபிரிட் சூப்பர் காரின் படங்களை வெளியிட்ட மெக்லாரன்!
உற்பத்தி நிலை மெக்லாரன் பி1 ஹைபிரிட் சூப்பர் காரின் படங்களை வெளியிட்டிருக்கிறது மெக்லாரன். ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கும் இந்த கார் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கான்செப்ட் நிலையிலிருந்ததைவிட சிற்சில மாறுதல்களுடன் இந்த கார் உற்பத்தி நிலையை எட்டியிருக்கிறது.
படங்கள் தவிர காரின் இன்னபிற தகவல்களையும் மெக்லாரன் வெளியிட்டிருக்கிறது. பார்முலா-1 கார்களில் உள்ளது போன்று டவுன்ஃபோர்ஸுக்காக டிராக் ரிடக்ஷன் சிஸ்டம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் கூடுதல் விபரங்கள் மற்றும் மெக்லாரன் வெளியிட்டிருக்கும் பி1 சூப்பர் காரின் படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பெர்ஃபார்மென்ஸ்
3 வினாடிகளில் 0-100 கிமீ வேகம்
7 வினாடிகளில் 0-200 கிமீ வேகம்
17 வினாடிகளில் 300 கிமீ வேகத்தை எட்டவல்லது. முந்தைய வெர்ஷனை விட இந்த வேகத்தை 11 வினாடிகளில் குறைவாக எட்டிவிடும்.
மணிக்கு அதிகபட்சமாக 350 கிமீ வேகம் வரை செல்லும்.

ஜீரோ எமிசன்
இந்த காரில் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி 20 கிலோமீட்டர் தூரம் வரை துளிகூட மாசு ஏற்படுத்தாமல் செல்ல முடியும். எலக்ட்ரிக் மோட்டாரில் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 48 கிமீ வேகத்தில் செல்லும்.

எல்டிஆர் ஏர் டக்ட்
கான்செப்ட் நிலைக்கும் உற்பத்தி நிலைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. உற்பத்தி நிலை மாடலில் எஞ்சினுக்கு கூடுதல் குளிர்ச்சி கிடைக்கும் வகையிலும், டவுன்ஃபோர்ஸை மேம்படுத்தும் வகையில் ஏர் டக்ட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் டயர்கள்
இந்த காரில் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ரேஸ் டிராக் மற்றும் சாதாரண சாலைகள் என இரண்டிலும் செல்லும் தகுதி பெற்றது.

பிரேக்கிங் சிஸ்டம்
இந்த காரில் புதிய கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இலகு எடை கொண்டதுடன், அதி விரைவாக குளிர்ச்சியடையும்.

லிமிடேட் எடிசன்
இந்த கார் லிமிடேட் எடிசனாக வர இருக்கிறது. வெறும் 375 பி1 கார்களை மட்டுமே மெக்லாரன் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.

விலை
1.5 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








