மெக்லாரன் பி1 காரின் முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இங்கிலாந்தை சேர்ந்த வாடிக்கையாளருக்கு முதல் பி1 ஹைபிரிட் சூப்பர் காரை மெக்லாரன் நிறுவனம் டெலிவிரி வழங்கியுள்ளது. அத்துடன் இதுவரை கசிய விடாமல் பாதுகாத்து வந்த அந்த கார் பற்றிய சில கூடுதல் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

"சாதாரண சாலை மற்றும் ரேஸ் டிராக் என இரண்டிற்கும் சிறப்பான கார் ஒன்றை இலக்காக வைத்து இந்த காரை வடிவமைத்திருக்கிறோம். அனைத்து விதத்திலும் சிறப்பான இந்த காரை வடிவமைத்து சாதித்துள்ள எஞ்சினியர் குழுவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 50 ஆண்டு கால எங்களது நிறுவன வரலாற்றில் பி1 காரை புதிய மைல்கல்லாக கருதுகிறேன்," என மெக்லாரன் சிஇஓ., மைக் புளூவிட் தெரிவித்துள்ளார்.

முதல் கார்

முதல் கார்

இங்கிலாந்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மஞ்சள் நிறத்திலான முதல் பி1 சூப்பர் காரை மெக்லாரன் தொழில்நுட்ப மையத்திலிருந்து நேரடியாக டெலிவிரி பெற்றுச் சென்றுள்ளார்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தமாக 375 மெக்லாரன் பி1 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு காரும் இங்கிலாந்திலுள்ள உற்பத்தி மையத்தில் கையால் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காருக்கு 17 நாட்கள்

ஒரு காருக்கு 17 நாட்கள்

ஒவ்வொரு மெக்லாரன் பி1 காரையும் ஒருங்கிணைப்பு மையத்தை சேர்ந்த 82 நிபுணர்களின் கைகளால் 17 நாட்கள் எடுத்துக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மொத்தம் 4 கட்டமாக அசெம்பிள் செய்யப்படுகிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ: 2.8 வினாடிகள்

0- 200 கிமீ: 6.8 வினாடிகள்

0- 300 கிமீ: 16.5 வினாடிகள்

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மெக்லாரன் பி1 கார் அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேக்கிங் திறன்

பிரேக்கிங் திறன்

பிரேக் பிடிக்கும்போது 100 வேகத்திலிருந்து காரை நிறுத்துவதற்கு வெறும் 2.9 வினாடிகளில் காரை நிறுத்திவிடும். அதாவது, 30.2 மீட்டருக்குள் கார் நின்றுவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

100 கிமீ தூரத்துக்கு 8.3 லிட்டர் எரிபொருள் செலவாகும். இந்த ஹைபிரிட் சூப்பர் கார் லிட்டருக்கு 12.04 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒரு கிலோமீட்டருக்கு 194 கிராம் கார்பனை வெளித்தள்ளும்.

ஜீரோ எமிசன்

ஜீரோ எமிசன்

இந்த காரில் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி 20 கிலோமீட்டர் தூரம் வரை துளிகூட மாசு ஏற்படுத்தாமல் செல்ல முடியும். எலக்ட்ரிக் மோட்டாரில் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 48 கிமீ வேகத்தில் செல்லும்.

ஸ்பெஷல் டயர்கள்

ஸ்பெஷல் டயர்கள்

இந்த காரில் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ரேஸ் டிராக் மற்றும் சாதாரண சாலைகள் என இரண்டிலும் செல்லும் தகுதி பெற்றது.

அதிவேக கார்

அதிவேக கார்

ஒரு காலத்தில் உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்ற எஃப்-1 கார் 0-300 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 22 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஆனால், அதன் புதிய தலைமுறை காராக வந்திருக்கும் பி1 இதே வேகத்தை 16.5 வினாடிகளில் எட்டிவிடும். அதேவேளை, எஃப்1 கார் போன்று உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெறுவதற்கு இப்போது போட்டியாளர்கள் இடம் தரவில்லை. இருப்பினும், உலகின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட கார்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம்.

விலை

விலை

மெக்லாரன் பி1 காருக்கு 1.5 மில்லியன் டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2013, 9:56 [IST]
English summary
It's official folks. The first production McLaren P1 has reached its customer and with it the British supercar maker has made public, for the first time, the official performance numbers of their hybrid hypercar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+