அடுத்து ஏ கிளாஸ் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன்: பென்ஸ் திட்டம்

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டை கலக்குவதற்கு பி கிளாஸ், ஏ கிளாஸ் கார்களை பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. மேலும், இந்த கார்கள் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் மிகவும் கவனமாக அடுத்தடுத்த மாடல்களை அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. பென்ஸ் கையில் உள்ள பட்டியலில் அடுத்ததாக பென்ஸ் ஏ கிளாஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனான ஏ45 ஏஎம்ஜி கார் உள்ளது. ஆனால், இந்த காரை அப்படியே அறிமுகப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

வடிவமைப்பு மற்றும் எஞ்சின் திறன் ஆகியவற்றில் மாற்றங்களை செய்தே விற்பனைக்கு கொண்டு வர இயலும். இல்லாவிட்டால், அதிகப்படியான இறக்குமதி வரியை செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

ஏஎம்ஜி கிட்

ஏஎம்ஜி கிட்

ஏஎம்ஜி கிட்டுடன் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெறும்.

எஞ்சின்

எஞ்சின்

3.0 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக டர்போசார்ஜர்கள் துணையுடன் கூடிய 2.0 லிட்டர் எஞ்சினை பொருத்துவதற்கு பென்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், 335 பிஎச்பி வரை வெளிப்படுத்தும் திறனை கொண்டதாக மாற்றப்படும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் மாறுதல் செய்யப்பட்ட 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஸ்பீடுஷிப்ட் டிசிடி 7 டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்ட்டத்தை கொண்டிருக்கும்.

உந்துசக்தி

உந்துசக்தி

0-100 கிமீ வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும்.

ஏஎம்ஜி ஸ்பெஷல்

ஏஎம்ஜி ஸ்பெஷல்

சிறப்பான சஸ்பென்ஷன், 18 இஞ்ச் அலாய் வீல்கள் மற்றும் விசேஷ பிரேக்குகளை கொண்டிருக்கும்.

Most Read Articles
English summary
Now that India almost has the full range of Mercedes luxury hatchbacks, the A Class and the B Class, how about moving on to the pocket rocket that is the A45 AMG? According to Autocar the Germans are actually looking into the feasibility of launching the AMG version of the A Class in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X