கார்களின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்திய பென்ஸ்
அனைத்து கார் மாடல்களின் விலையையும் 10 சதவீதம் வரை உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
உற்பத்தி செலவீனம் மற்றும் வருவாய் வளர்ச்சியை கருதித்தில் கொண்டு கார் விலையை உயர்த்துவதாக பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் அறிவித்தன.

இதைத்தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனிடையே, ஏஎம்ஜி கார்களுக்கு பிரத்யேக ஷோரூம்களை நிறுவுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
மும்பை, பெங்களூர், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் ஏஎம்ஜி கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஎம்ஜி பிராண்டில் இ63 ஏஎம்ஜி, ஜி63 ஏஎம்ஜி மற்றும் எஸ்எல்கே 55 ஏஎம்ஜி ஆகிய 3 கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








