ரூ.22.6 லட்சத்தில் டீசல் பி கிளாஸ் கார் விற்பனைக்கு வந்தது
ரூ.22.6 லட்சம் விலையில் புதிய பென்ஸ் பி கிளாஸ் காரின் டீசல் மாடல் சற்றுமுன் மும்பையில் நடந்த விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பாலிவுட் நடிகர்கள் அபே தியோல், ஆதித்தி ராவ் மற்றும் பென்ஸ் இந்தியா தலைவர் எபெர்ஹார்டு கெர்ன் ஆகியோர் பி கிளாஸ் டீசல் மாடலை பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்தனர்.

பி180 சிடிஐ என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 எச்பி பவரை அளிக்கும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.
இந்த கார் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. மணிக்கு 190 கிமீ வேகம் வரை செல்லும் அம்சங்களை கொண்டது. பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடல் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








