கலக்கலான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய பென்ஸ் ரேஸ் கார்!!
சிஎல்ஏ செடான் காரின் ஏஎம்ஜி ரேஸிங் சீரிஸ் மற்றும் சிஎல்ஏ 250 ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்த இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். பல்வேறு நாடுகளில் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் அம்சங்களுடன் சிஎல்ஏ 45 ஏஎம்ஜி ரேஸிங் சீரிஸ் கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
ரேஸ் வீரர்கள் மற்றும் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய கார்களின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏரோடைனமிக் பாடி கிட்
சிஎல்ஏ 45 ஏஎம்ஜி ரேஸிங் சீரிஸ் காரில் ஏரோடைனமிக் தத்துவத்தின் அடிப்படையிலான ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்பக்க பம்பரில் ஸ்பிளிட்டர்கள், பெரிய ஏர் டேம், விங் என ஏராளமான ஆக்சஸெரீஸ்களுடன் ரேஸ் வெர்ஷனாக மாறியுள்ளது.

கார்பன் ஃபைபர்
இலகு எடை, அதிக உறுதித்தன்மை காண்ட கார்பன் ஃபைபர் பாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காக்பிட்
அதிக உறுதி கொண்ட ரோல்கேஜ் ஸ்டீல் உள்புறத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்பன் ஃபைபர் பி1300 ஜிடி ரேஸிங் பக்கெட் இருக்கை பொருத்தப்பட்டு இருப்பதால் டிரைவருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும்.

சிறப்பு வசதிகள்
எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸில் ஏற்படும் வெப்ப அளவு, காரின் வேகம், ஆர்பிஎம் உள்ளிட்ட தகவல்களை டிரைவர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஸ்டீயரிங் வீல்
பேடில் ஷிப்ட் கொண்ட ரேஸிங் ஸ்டீயரிங் வீல் இருப்பதோடு, தீத்தடுப்பு மற்றும் எச்சரிக்கை கருவிகளை இயக்கும் சுவிட்சுகள் சென்ட்ரல் கன்சோல் இறக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்
சிஎல்ஏ 45 ஏஎம்ஜி உற்பத்தி நிலை காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 360 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் டிசிடி 7 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கிறது.

உந்துசக்தி
0 - 96 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் கடந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சஸ்பென்ஷன்
வேகத்துக்கு தக்கவாறு ஸ்பிரிங் மற்றும் டேம்பரின் உயரத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான சிறப்பு சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஏஎம்ஜி கிராஸ் ஸ்போக் டிசைன் கொண்ட அலாய் வீல்களும், டன்லப் ரேஸ் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








