ஆடி காற்றை ஓவர்டேக் செய்ய 250kmph காரை களமிறக்கும் பென்ஸ்!
2014 பென்ஸ் இ63 செடானின் ஏஎம்ஜி பேட்ஜ் கொண்ட மாடல் வரும் 25ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பெர்ஃபார்மென்ஸ் செடான் முதன்முறையாக இந்த மண்ணில் போட்டியாளர்களை எதிர்கொள்ள களமிறக்கப்படுகிறது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஆடி ஆர்எஸ்5 மற்றும் எஸ்6 கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.
இ63 ஏஎம்ஜி கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. சொகுசு, பெர்ஃபார்மென்ஸ் என இரண்டு விதத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தரும் அம்சங்கள் கொண்டது. இந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்கும் 5வது மாடல் என்பதுடன், ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் வரும் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சின்
இந்த காரில் 557 எச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆல் வீல் டிரைவ்
இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸின் பிரத்யேகமான 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 7 ஸ்பீடு ஸ்பீட்ஷிப்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

உந்து சக்தி
இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் தொட்டுவிடும். ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இதன் எஸ் வேரியண்ட் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு
மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் அம்சங்களை கொண்டது.

விலை
ஆடியின் தயாரிப்புகளுக்கு போட்டியை கொடுப்பதற்காக இந்த கார் ஒரு கோடி விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








