பென்ஸ் மல்டி ஆக்ஸில் பிக்கப் டிரக்குக்கு ரூ.3.2 கோடி விலை நிர்ணயம்
கடந்த மார்ச்சில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட மல்டி ஆக்சில் பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இல்லாத மாடலாக வந்த இந்த மல்டி ஆக்சில் பிக்கப் டிரக் உலக அளவில் வாகன பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இந்த நிலையில், இந்த ஆடம்பர பிக்கப் டிரக்கின் விலையை தற்போது பென்ஸ் அறிவித்துள்ளது. 3.79 லட்சம் யூரோ விலையில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.3.2 கோடியாகும். இந்த பிரம்மாண்ட ஆடம்பர எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்பார்ம்
2011ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் ராணுவ பயன்பாட்டில் உள்ள ஜி வேகன் பிளாட்பார்மில்தான் இந்த பிக்கப் டிரக் பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பர்சனல் மாடல்
ராணுவ பயன்பாட்டில் இருந்து வரும் ஜி வேகன் பிக்கப் டிரக்கின் தனி நபர் பயன்பாட்டு மாடலாக இந்த மெகா சைஸ் பிக்கப் டிரக்கை பென்ஸ் களமிறக்குகிறது.

எஞ்சின்
இந்த பிரம்மாண்ட பிக்கப் டிரக்கை எளிதாகவும், சக்திவாய்ந்ததாக இயக்கச் செய்யும் வகையில் 536 பிஎச்பி ஆற்றல் கொண்ட 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
இந்த பிக்கப் டிரக்கில் பென்ஸ் நிறுவனத்தின் 7ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

4 டன் எடை
3,775 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது இந்த பிக்கப் டிரக்.

கிரவுன்ட் கிளியரன்ஸ்
இந்த பிக்கப் டிரக்கை எந்தவொரு சாலையிலும் இயக்கத்தக்க வகையில் 460 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி
இந்த பிக்கப் டிரக்கின் கேபினில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். பின்புறம் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான பக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

சக்கரங்கள்
இந்த பிரம்மாண்ட பிக்கப் டிரக்கில் 37 இஞ்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

விலை
ரூ.3.2 கோடி மதிப்பில் வந்திருக்கும் இந்த புதிய பிக்கப் டிரக்தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது அதிக விலை கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








