பென்ஸ் ஜிஎல் கிளாஸ் உற்பத்தி துவக்கம்: இந்தியாவுக்கு பெருமை
இந்தியாவில் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி உற்பத்தியை பென்ஸ் துவங்கியிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது இடமாக இந்தியாவில் இந்த எஸ்யூவி உற்பத்தி துவங்கப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் இந்த புதிய ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎல் 350 சிடிஐ 4 மேட்டிக் புளு எஃபிஸியன்ஸி என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இறக்குமதி
முதலில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விதமாக 100 ஜிஎல் கிளாஸ் எஸ்யூவிகளை இறக்குமதி செய்து வழங்கப்படும் என்று பென்ஸ் தெரிவித்திருந்தது.

அசெம்பிளிங் துவக்கம்
சகனில் உள்ள ஆலையைில் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியின் அசெம்பிளிங் துவங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ரூ.72.58 லட்சம் என்ற விலையில் புதிய பென்ஸ் ஜிஎஎல் கிளாஸ் எஸ்யூவி கிடைக்கும். இது இறக்குமதி மாடலைவிட ரூ.5 லட்சம் குறைவாக இருக்கும்.

எஞ்சின்
இந்த எஸ்யூவியில் 258 பிஎச்பி ஆற்றலையும், 510 என்எம் டார்க்க்யையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.9 வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

இந்தியாவுக்கு பெருமை
அமெரிக்காவின் டஸ்கலூசாவிலுள்ள ஆலையில் மட்டுமே இந்த எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கடுத்து, இரண்டாவதாக இந்தியாவில் உற்பத்தி துவங்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








