பென்ஸ் புதிய காம்பெக்ட் எஸ்யூவி: படங்களுடன் கூடுதல் தகவல்கள்
அடுத்த மாதம் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இதனை அறிவித்த கையோடு, அந்த காரின் அதிகாரப்பூர்வ படங்களையும் வெளியிட்டுள்ளது.
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி உள்ளிட்ட கிராஸ்ஓவர் மாடல்களுடன் போட்டி போட வரும் இந்த புதிய எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
173.9 இஞ்ச் நீளம், 71 இஞ்ச் அகலம், 58.8 இஞ்ச் உயரத்துடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஏ கிளாஸ் காரை விட சிறிது பெரிய மாடலாக இருக்கும்.

எஞ்சின்
இந்த காரில் டர்போசார்ஜ்டு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த எஞ்சின் 208 எச்பி சக்தியை அளிக்கும்.

ஆல் வீல் டிரைவ்
இந்த எஸ்யூவி பென்ஸ் நிறுவனத்தின் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

டாப் ஸ்பீடு
இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 233 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை கடக்க 6.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

சாஃப்ட் ரோடர்
இது சாஃப்ட் ரோடு எஸ்யூவியாக இருந்தாலும், ஸ்கிட் பிளேட், குரோம் ரூஃப் ஆகியவை ஆஃப் ரோடருக்குண்டான தோற்றத்தை அளிக்கும்.

அலாய் வீல்கள்
19 இஞ்ச் அலாய் வீல்கள் இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது காரின் கம்பீரத்தை கூட்டுகிறது.

ஏஎம்ஜி வெர்ஷன்?
இந்த காரின் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவுக்கு...
அடுத்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் இந்த கார் 2015ம் ஆண்டு துவக்கத்தில் நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.


Click it and Unblock the Notifications








