புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் சஸ்பென்ஷனுக்கு கோழிகளை வைத்து விளம்பரம்!!
மேஜிக் பாடி கன்ட்ரோல் சிஸ்டம் என்ற பெயரில் சாலைகளின் நிலைகளை பொறுத்து மாறிக்கொள்ளும் புதிய சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பென்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சஸ்பென்ஷன் சிஸ்டத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், கோழிகளை வைத்து பென்ஸ் விளம்பரம் எடுத்துள்ளது.
கார் எவ்வளவு குலுங்கினாலும் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு சிறு அதிர்வு கூட தெரியாத வகையில் செல்லும் சிறப்பம்சங்களை இந்த புதிய சஸ்பென்ஷன் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சஸ்பென்ஷன் செயல்பாடு பற்றிய கூடுதல் தகவல் மற்றும் அட்டகாசமான வீடியோவையும் ஸ்லைடரில் இணைத்துள்ளோம்.

செயல்படும் விதம்
காரின் முன்பக்க வைன்ட்ஷீல்டு மேற்புறத்தில் சென்சார் மற்றும் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். சாலையின் முன்னால் இருக்கும் மேடு, பள்ளங்கள், வேகத்தடைகளை இவற்றின் மூலம் கண்டறிந்து அதற்கு முன்னதாகவே காரின் சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டிருக்கும் காந்த சக்தி கொண்ட டேம்பரில் மாற்றங்களை செய்து கொள்ளும்.

அலுங்கல் இருக்காது
சென்சார் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒரு வினாடிக்கு 100 முறை கூட சஸ்பென்ஷனில் மாற்றங்கள் நடக்கும். இதனால், காரின் சேஸீயில் அதிர்வுகள் மற்றும் குலுங்கல்கள் கடத்தப்படாது.

சொகுசான பயணம்
2014 பென்ஸ் எஸ்550 செடான் காரின் இந்த புதிய சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது. மேடு பள்ளம் நிறைந்த சாலைகளில் செல்லும்போது கூட காருக்குள் பயணிப்போருக்கு குலுங்கல்கள் இல்லாமல் மிக சொகுசான பயணத்தை வழங்கும்.

விலை
மேஜிக் பாடி கன்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் வரும் புதிய 2014 மாடல் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் 60 லட்ச ரூபாய் விலை கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு இறுதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.
வீடியோ
அடாப்டிவ் சஸ்பென்ஷன் செயல்படும் விதத்தை கோழிகளை வைத்து அட்டகாசமாக புரிய வைக்கும் பென்ஸ் வீடியோ. காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications








