கோவையில் புதிய பென்ஸ் கார் ஷோரூம் திறப்பு

தென் இந்தியாவின் மான்செஸ்டராக போற்றப்படும் தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் இன்று திறக்கப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய ஷோரூமை அமைத்திருக்கிறது.

Mercedes Benz E60 AMG

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் எபெர்ஹார்டு கெர்ன் மற்றும் சுந்தரம் மோட்டார்ஸ் இயக்குனர் சரத் விஜயராகவன் இந்த புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.

இந்த புதிய ஷோரூம் ஒரே நேரத்தில் 9 கார்களை பார்வைக்கு நிறுத்தும் வசதி கொண்டது.

பார்க்கிங் வசதி, டிரைவர்களுக்கான ஓய்வு அறை, ஆக்சஸெரீஸ்கள் பிரிவு என பல்வேறு வசதிகளுடன் இந்த கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், இந்த புதிய ஷோரூமில் பயிற்சி பெற்ற 15 விற்பனை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 12,500 சதர அடி பரப்பளவில் சர்வீஸ் சென்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 35 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சேவை பெறும் வகையில் இந்த சர்வீஸ் மையம் செயல்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2013, 11:29 [IST]
English summary
Continuing the endeavor of fascinating its growing customer base, Mercedes-Benz India today inaugurated its state-of-the-art 3S facility in the Manchester of South India, Coimbatore. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+