வாடிக்கையாளர்களுக்காக புனே ஆலையில் ஹெலிகாப்டர் தளம் அமைத்த பென்ஸ்!
வாடிக்கையாளர்கள் வந்து செல்வதற்கு வசதியாக புனேயிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொழிற்சாலையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் சகன் தொழிற்பேட்டையில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஆலை அமைந்துள்ளது. இங்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டிலான பெர்ஃபார்மென்ஸ் ரக கார்களுக்கென பிரத்யேக ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் கார் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்காக ஆலையின் உட்புறத்தில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.

பல்வேறு சிறப்பு அனுமதிகள் பெற்று இந்த புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிர்வாக இயக்குனர் எபர்ஹார்டு கெர்ன் கூறியதாவது,
மும்பையிலிருந்து இந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு ஹெலிகாப்டர் வருவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களிலிருந்தும் இந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு நேரடியாக ஹெலிகாப்டரில் வாடிக்கையாளர்கள் வருவதற்கான அனுமதி விரைவில் கிடைத்துவிடும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் ரக கார்களை இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதுவரை 200 கார்களை விற்பனை செய்துள்ளோம். இது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளான வாடிக்கையாளர் கொண்ட மார்க்கெட். எனவே, இங்கு எண்ணிக்கை முக்கியமல்ல. இருப்பினும், இந்த வாடிக்கையாளர்கள் வட்டம் தற்போது மெல்ல விரிவடைந்து வருகிறது
இந்த ஹெலிகாப்டர் தளத்தை சிறப்பு அனுமதிகளை பெற்று அமைத்துள்ளோம். இதன்மூலம், வாடிக்கையாளர்களின் வீண் சிரமம், அலைச்சல்கள் குறையும்," என்று கெர்ன் கூறினார்.


Click it and Unblock the Notifications








