கண்ணுக்குப் புலப்படாமல் 'மேஜிக்' காட்டிய பென்ஸ் கார்!

சுற்றுச் சூழலுக்கு தீங்கு இழைக்காத ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை வடிவமைப்பில் பல நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், ஹைட்ரஜனை சேமித்து வைப்பதும், கார் சிலிண்டரில் வைத்து எடுத்துச் செல்வதும் ஆபத்துக்கள் அதிகமிருக்கிறது. மேலும், ஹைட்ரஜனில் இயங்கும் கார்களின் விலையும் அதிகமாக இருப்பதால் இந்த கார்களை வணிகரீதியில் வெற்றி பெற வைப்பது மிகுந்த சவால்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், ஹைட்ரஜனில் இயங்கும் எஃப் செல் என்ற காரை பென்ஸ் வடிவமைத்திருக்கிறது. இந்த கார் மீது உலகின் கவனத்தை திரும்ப வைக்கும் நூதன முயற்சியை பென்ஸ் செய்தது. ஒருபக்கம் கேமராவையும் மறுபக்கம் எல்இடி திரையையும் அந்த காரில் பொருத்தியது.

எல்இடி திரை பொருத்தப்பட்டிருக்கும் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அடுத்த பக்கம் உள்ள பொருட்கள் முப்பரிமாணத்தில் தெரியும். இதனால், இடையில் கார் இருப்பதே தெரியாத வகையில் இந்த முயற்சியை செய்து காட்டி அசத்தியிருக்கிறது பென்ஸ். கண்ணுக்குப் புலப்படாத வகையில் மேஜிக் காராக மாற்றிக்காட்டியது பற்றிய படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

நவீன கேமரா

நவீன கேமரா

காரின் ஒரு பக்கத்தில் கெனான் டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எல்இடி மேட்

எல்இடி மேட்

காரின் மறுபக்கத்தில் எல்இடி மேட் பொருத்தப்பட்டுள்ளது.

புது டெக்னிக்

புது டெக்னிக்

ஒரு பக்கத்தில் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அதேவேளை காரின் மறுபக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எல்இடி மேட்டில் தெரியும்.

இது எப்டி இருக்கு?

இது எப்டி இருக்கு?

கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் எல்இடி மேட் திரை உள்ள பக்கத்திலிருந்து பார்க்கும்போது இவ்வாறு தெரிகிறது. எனவே, காரின் வீல்கள் மட்டுமே தெரியும். கார் நிற்பது தெரியாது.

 ஜேம்ஸ்பாண்ட் படத்தில்

ஜேம்ஸ்பாண்ட் படத்தில்

டை அனதர் டே ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இதேபோன்ற மேஜிக் கார் வரும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு.

பிரபலப்படுத்துவதற்காக மட்டுமல்ல..!!

பிரபலப்படுத்துவதற்காக மட்டுமல்ல..!!

இந்த காரை பிரபலப்படுத்துவதற்காக மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காது என்பதை சிம்பாளிக்காக உணர்த்தும் விதத்திலேயே இந்த முயற்சியை மேற்கொண்டதாக பென்ஸ் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 6, 2013, 13:13 [IST]
English summary
Mercedes-Benz has done the unthinkable. It has made an invisible car, although only from one side. The German premium carmaker has promoted its zero emission F-Cell car in a unique way. It has made the F-Cell invisible using latest LED technology.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+