குறைவான விலையில் டீசல் பி கிளாஸ் காரை களமிறக்கும் பென்ஸ்
வரும் 11ந் தேதி டீசல் எஞ்சின் கொண்ட பி கிளாஸ் காரை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைகக்கு கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பி கிளாஸ் கார் பென்ஸ் விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. ஆனால், பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் சமீபத்தில் ஏ கிளாஸ் காரையும் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால், ஏ கிளாஸ் பெட்ரோல், டீசல் இரு மாடல்களிலும் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், பி கிளாஸ் காரிலும் டீசல் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது பென்ஸ். வரும் 11ந் தேதி பென்ஸ் பி கிளாஸ் காரின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பி 180சிடிஐ டீசல் பி கிளாஸ் காரில் 107.3 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் துணைபுரியும். ஆனால், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 17 இஞ்ச் அலாய் வீல்கள் இருக்காது. 16 இஞ்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.
மேலும், பெட்ரோல் மாடலைவிட ரூ.70,000 முதல் ரூ.90,000 குறைவான விலையில் வர இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பி கிளாஸ் டீசல் வேரியண்ட் மூலம் விற்பனை அதிகரிக்கும் என பென்ஸ் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








