ரூ.41.40 லட்சத்தில் புதிய பென்ஸ் இ கிளாஸ் அறிமுகம்!
ரூ.41.5 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட பென்ஸ் இ கிளாஸ் கார் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட மாடலாக வந்துள்ளது.
மேலும், ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு வசதிகளுடன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கும். இதுதவிர, லிமிடேட் எடிசன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 23,000 இ கிளாஸ் கார்களை விற்பனை செய்ததோடு, இந்தியாவில் சிறந்த சொகுசு செடான் காராக பெயர் பெற்ற இந்த காரின் கூடுதல் அம்சங்கள் குறித்து ஸ்லைடரில் காணலாம்.

ஹெட்லைட்
ஸ்பிளிட் ஹெட்லைட் அசெம்பிளி, பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய கிரில் ஆகியவை கவர்ச்சியை சேர்க்கிறது.

சிறப்பம்சங்கள்
புதிய டெயில் கிளஸ்ட்டர், புதிய டேஷ்போர்டு டிசைன், மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், கியர் ஷிப்ட் பேடில்களுடன் வந்துள்ளது.

புதிய நேவிகேஷன் சிஸ்டம்
புதிய டிசைனில் ஏசி வென்ட்டுகள், கமாண்ட் ஆன்லைன் நேவிகேஷன் சிஸ்டம், டிவிடி பிளேயர் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
7 ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது.

மைலேஜ்
டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் டேங்க் 80 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

ஸ்டார்ட் ஸ்டாப்
இந்த காரில் எரிபொருள் சிக்கனம் தரும் ஈக்கோ ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் உள்ளது.

ஏர்பேக்ஸ்
இந்த காரில் 8 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதர வசதிகள்
ஆக்டிவ் பார்க் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் பானட், வுட் பினிஷ், நெப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, பனரோமிக் சன்ரூஃப் ஆகிய ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் கொண்டிருக்கிறது.

விலை
பெட்ரோல் மாடல் விலை ரூ.41.40 லட்சமாகவும், டீசல் மாடல் விலை ரூ.44.48 லட்சமாகவும், லிமிடேட் எடிசன் டீசல் மாடல் விலை ரூ.49.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிமிடேட் எடிசன்
அவன்த்கார்டே என்ற லிமிடேட் எடிசன் டீசல் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. 100 கார்கள் மட்டும் இந்த பேட்ஜில் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








