2014 பென்ஸ் எஸ் கிளாஸ்... நவீன தொழில்நுட்பங்களின் சங்கமம்!!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2014 மாடல் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை அறிமுகம் செய்த விதமே சுவாரஸ்யமானது. பென்ஸ் வடிவமைப்பு மையத்திலிருந்து டிஎச்எல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இருக்கும் ஏர்பஸ் ஆலையில்தான் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும், இதன் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் 104 பக்கங்கள் கொண்ட புரொசரும் வெளியிடப்பட்டது. ஒரு முழுமையான சொகுசு செடான் காராக கருதப்படும் எஸ் கிளாஸில் தற்போது ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், முக்கிய அம்சங்களை மட்டும் இங்கே காணலாம்.

தோற்றம்
எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட், டேஞ்சர்லைட், முந்தைய மாடலைவிட இருமடங்கு பெரிய முகப்பு கிரில் ஆகியவை 2014 எஸ் கிளாஸ் காரின் தோற்றத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இது சிறந்த ஏரோடைனமிக் தொழில்நுட்பத்துடன் வடிமவைக்கப்பட்டுள்ளது.

சொகுசு
முந்தைய மாடலைவிட இருக்கைகள் அதிக சொகுசாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. பயணத்தின் போது அதிர்வுகள் தெரியாத வகையிலான தானியங்கி அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் டிரைவிங்
போக்குவரத்தை கண்காணிக்கும் வசதிகொண்ட கேமரா, ரேடார் மற்றும் சென்சார்கள் உள்ளன. மணிக்கு 60 கிமீ., வேகத்தில் தானியங்கி முறையில் இந்த கார் செல்லும். ஆனால், முழுமையான தானியங்கி காராக கூற முடியாது. 30 வினாடிகளுக்கு ஒருமுறை டிரைவரின் உதவி தேவைப்படும்.

வைன்ட்ஷீல்டு கேமரா
முன்பக்க வைன்ட்ஷீல்டில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தானியங்கி முறையில் கார் செல்லும்போது சரியான தடத்தில் செல்வதற்கு உதவும்.

தானியங்கி பிரேக்
தானியங்கி டிரைவிங் மட்டுமின்றி, மோதல் ஏற்படும் சமயங்களில் தானியங்கி முறையில் பிரேக் பிடித்து காரை நிறுத்தும் வசதியும் இருக்கிறது.

சூப்பர் வசதி
வைன்ட்ஷீல்டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம் சாலையின் முன்னால் இருக்கும் மேடு, பள்ளங்கள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு காரின் சஸ்பென்ஷன் செட்டிங் தானாகவே மாறிக்கொள்ளும் என்பது இதன் மற்றொரு முக்கிய விசேஷம்.

சோனார் குரூஸ் கன்ட்ரோல்
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் கார் செல்லுமாறு பார்த்துக் கொள்ளும்.

வேரியண்ட்கள்
ரியல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எஸ்550 மாடலில் 455 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது. ஆல் வீல் டிரைவ் கொண்ட பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனான எஸ்63 ஏஎம்ஜி மாடல் நவம்பரில் விற்பனைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஹைபிரிட் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்
தற்போதைய நிலையில், டிரைவருக்கும், பயணிகளுக்கும் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த புதிய காரை அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்

புதிய எஸ் கிளாஸ் படங்கள்



Click it and Unblock the Notifications








