குறைந்த விலையில் புதிய எஸ்யூவியை களமிறக்க பென்ஸ் திட்டம்
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது பென்ஸ் நிறுவனத்துக்கு புதிய தெம்பையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இதையடுத்து, மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, புதிய ஹேட்ச்பேக் கார் மற்றும் குறைந்த விலை கொண்ட என்ட்ரி லெவல் சொகுசு எஸ்யூவி கார் உள்பட 5 புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் குறைந்த விலை எஸ்யூவி அறிமுகம் குறித்த தகவலை அதன் நிர்வாக இயக்குனர் எபர்ஹார்டு எச் கெர்ன் சூசகமாக தெரிவித்தார். ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி படங்களை ஸ்லைடரில் காணலாம்.

அது எந்த மாடல்?
கெர்ன் சூசகமாக கூறிய குறைந்த விலை எஸ்யூவியாக ஜிஎல்ஏ., கருதப்படுகிறது. சமீபத்தில் இதன் கான்செப்ட் மாடல் ஷாங்காய் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சாஃப்ட் ரோடர்
பிஎம்டபிள்யூ எக்ஸ்1, ஆடி க்யூ-3 மாடல்களை போன்று இந்த எஸ்யூவியும் சாஃப்ட் ரோடர் எஸ்யூவியாக இருக்கும்.

விலை
பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 மற்றும் ஆடி க்யூ-3 ஆகிய எஸ்யூவி மாடல்கள் ரூ.27 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி ரூ.25 லட்சத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய புரட்சி
முதலிடத்துக்கு முன்னேறும் விதத்தில் அடுத்தடுத்து 5 புதிய மாடல்களை பென்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இதில், விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் ஏ-கிளாஸ் கார் சொகுசு கார் மார்க்கெட்டில் புதிய புரட்சியை படைக்கும் என பென்ஸ் தலைவர் கெர்ன் குறிப்பிட்டுள்ளார்.

பிற மாடல்கள்
பி கிளாஸ் காரின் டீசல் மாடல், சிஎல்ஏ காம்பெக்ட் எஸ்யூவி, சிஎல்ஏ 4 டோர் கூபே, ஏ கிளாஸ் உள்ளிட்ட மாடல்கள் வர இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, ஜிஎல்ஏ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் ஜிஎல்ஏ கான்செப்ட்
கெர்ன் சூசகத்தால் பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் புதிய ஜிஎல்ஏ கான்செப்ட் காரின் படங்களை தொடர்ந்து காணலாம்.

கெர்ன் சூசகத்தால் பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் புதிய ஜிஎல்ஏ கான்செப்ட் காரின் படத்தை காணலாம்.

Click it and Unblock the Notifications