செப்டம்பர் முதல் கார் விலையை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ்
செப்டம்பர் முதல் தேதி முதல் அனைத்து கார் விலையையும் உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.
மாடலுக்கு தக்கவாறு 2.5 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவீனம் உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றை விலையுயர்வுக்கு பென்ஸ் காரணம் காட்டியுள்ளது.

இதுகுறித்து பென்ஸ் நிர்வாக இயக்குனர் எபெர்ஹார்டு கெர்ன் கூறுகையில்," ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி வரியை அதிகம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி செலவீனம் வெகுவாக அதிகரித்து வருவதால் வேறு வழியில்லாமல் கார் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








