முதலிடத்துக்கு கடும் போட்டி... செப்டம்பரில் பென்ஸ் முன்னிலை
இந்திய மார்க்கெட்டில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி வருகிறது.
கடந்த மாதம் 1,011 கார்களை விற்பனை செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இது ஆடியைவிட 46 கார்கள் கூடுதலாகும்.

இதைவிட, கடந்த ஆண்டு செப்டம்பரில் 654 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த பென்ஸ் கடந்த மாதம் விற்பனையில் ஆயிரத்தை கடந்துள்ளது.
விற்பனை இரட்டிப்பாக உயர்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டிய விஷயம். இதேநிலை, நீடித்தால் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு பென்ஸுக்கு பிரகாசமாகியுள்ளது.
பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்த ஆடியின் சந்தோஷத்தை நிலைக்க விடாமல் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
பென்ஸ் நிறுவனத்தின் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களின் வருகை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications