4ம் தலைமுறையாக வரும் புதிய மினி கார்: உலகம் முழுவதும் பேராவல்

நவம்பர் மாதம் 18ந் தேதி ஆக்ஸ்போர்டு ஆலையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் 4ம் தலைமுறை மினி கார் அறிமுகமாகிறது. நவம்பர் 18 அன்று மினி தனது புதிய காரை அறிமுகம் செய்வதில் விஷயமிருக்கிறது.

அன்றுதான் மினி காரின் ஒரிஜினல் டிசைனை வடிவமைத்த சர் அலெக் இஸிகோனிஸ் 107வது பிறந்த தினமாகும். ஆக்ஸ்போர்டு ஆலையில் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு லண்டனில் சிறப்பு விருந்து ஒன்றுக்கும் மினி ஏற்பாடு செய்துள்ளது.

New Mini Car

அதன்பிறகு டோக்கியோ மோட்டார் ஷோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் புதிய மினி காரை பார்வைக்கு வைக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டு முதல் சர்வதேச அளவில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று மினி பிராண்டு தெரிவித்துள்ளது.

எனவே, இந்தியாவிலும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய தலைமுறை மினி கார் விற்பனைக்கு வர இருக்கிறது. மினி பிராண்டின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூவின் யுகேஎல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட முதல் மினி கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

New Mini Car

இந்த சேஸீயின் சிறப்பம்சம் ஃப்ரண்ட் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இரண்டிற்கும் பொருத்தமாக இருக்கும். பிஎம்டபிள்யூ பிளாட்பார்மை பயன்படுத்தியது மட்டுமில்லாமல், அந்த நிறுவனத்தின் புதிய எஞ்சின்களையும் இந்த கார் பெற இருக்கிறது.

1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். புதிய தலைமுறை மினி கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2013, 17:25 [IST]
English summary
First came the undisguised spy shots, several of them, followed by BMW official ‘spy shot' (seen below). It has finally been confirmed that the next gen Mini will make its debut on November 18 at its Oxford plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+