புதிய டீசல் எஞ்சினுடன் மீண்டும் வரும் மிட்சுபிஷி அவுட்லேண்டர்!

By Saravana

இந்தியாவில் பிரிமியம் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்ய மிட்சுபிஷி முடிவு செய்தத. இதற்காக, சிடியா, எவோ எக்ஸ் ஆகிய செடான் கார்களை இந்திய மார்க்கெட்டில் இருந்து விலக்கிக் கொண்டது.

மேலும், பெட்ரோல் மாடலில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த அவுட்லேண்டர் விற்பனையில் சோபிக்காததால் அதன் உற்பத்தியையும் நிறுத்தியது. இந்த நிலையில், புதிய டீசல் எஞ்சினுடன் அவுட்லேண்டர் எஸ்யூவியை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருகிறது மிட்சுபிஷி. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி பி.விஜயன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Mitsubishi Outlander

அடுத்த ஆண்டு 3ம் தலைமுறை மிட்சுபிஷி அவுட்லேண்டரை சர்வதேச அளவில் மிட்பிஷி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருப்பதாக விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அவுட்லேண்டரில் 147 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட 2ம் தலைமுறை மாடல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால், புதிய அவுட்லேண்டர் திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிளிங் செய்து விற்கப்பட உள்ளது. இதனால், சவால் கொடுக்கும் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2013, 16:15 [IST]
English summary
Earlier this year, Mitsubishi made it clear that it only wanted to do business in India as a premium SUV brand. Towards this end the Japanese company withdrew its sedan products - Cedia Sports and Evo X. At the same time, the Outlander petrol was also discontinued owing to poor sales. Financial Express has now learned from P Vijayan, COO of HM, that the Outlander will make a comeback in 2014, albeit with a diesel engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+