புதிய பிஎம்டபிள்யூ இசட் -4 ரோட்ஸ்டெர் கார் அறிமுகம் - முழு விபரம்

By Saravana

மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ இசட்4 கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புனே, பவேரியா மோட்டார்ஸ் ஷோரூமில் நடந்த விழாவில் இந்த கவர்ச்சிமிக்க ரோட்ஸ்டெர் ரக கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஹார்ட் டாப் கொண்ட இந்த கன்வெர்ட்டிபிள் கார் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் முதன்முதலாக வெளியுலகுக்கு தரிசனம் தந்தது. முந்தைய மாடலில் சிறிது மாற்றங்களை செய்து புதிய மாடலாக இதனை அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ.

இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ள இந்த புதிய கார் ரூ.68.90 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கும். புனேயில் நடந்த அறிமுக விழா காட்சிகள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாறுதல்

மாறுதல்

தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. ஹெட்லைட், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவை புதிதாக தெரிகின்றன.

பம்பர்

பம்பர்

முன்புற பம்பரின் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே சில வித்தியாசங்களை உணர முடிகிறது.

புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

புதிய 18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் அழகு. இந்த புதிய கார் வாலன்சியா என்ற ஆரஞ்ச் வண்ணத்திலும் கிடைக்கும்.

இருக்கையில் டிசைன்

இருக்கையில் டிசைன்

இருக்கையின் நடுவில் ஆரஞ்ச் வண்ண கோடுகள் போடப்பட்டுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் கன்சோல் கருப்பு மற்றும் ஆந்த்ரசைட் வுட் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. ஐபோனுடன் இணைந்து வசதிகளை அள்ளித் தரும் மேம்படுத்தப்பட்ட ஐடிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 ஒரே ஒரு எஞ்சின் மாடலில் மட்டும் கிடைக்கும்.3.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சினுடன் கிடைக்கும். இந்த எஞ்சின் 306 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந் கார் 0 -100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

வேரியண்ட்

வேரியண்ட்

எஸ்டிரைவ் 35ஐ மற்றும் எஸ்டிரைவ் 35ஐ ப்யூர் டிராக்ஷன் என்ற இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இரண்டாவது வேரியண்ட் வாலன்சியா ஆரஞ்ச் கலர், அல்காண்ட்டரா லெதர் அப்ஹோல்ஸ்டரி கொண்டதாக கிடைக்கும்.

விலை

விலை

எஸ்டிரைவ் 35ஐ வேரியண்ட் ரூ.68.9 லட்சம் விலையிலும், எஸ்டிரைவ் 35ஐ ப்யூர் டிராக்ஷன் வேரியண்ட் ரூ.69.9 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2013, 16:03 [IST]
English summary
The 2014 model year BMW Z4 roadster has been launched in India. The stylish new hardtop convertible was revealed earlier this year at the Detroit Motor Show. The new BMW Z4 is mostly unchanged from the outgoing model, with all the changes limited to cosmetic updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+