இந்தியாவில் பவர்ஃபுல் 2.2 லி டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்
மிரட்டலான தோற்றம், அதிசக்திவாய்ந்த எஞ்சினுடன் முற்றிலும் புதிய மாடலாக அடுத்த தலைமுறை ஃபோர்டு எண்டெவர் தயாராகியுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள ஃபோர்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கப்பட்டு தற்போது அங்கு சோதனை செய்யப்பட்டு வரும் புதிய எண்டெவர் விரைவில் சர்வதேச பயணத்தை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய சக்திவாய்ந்த எஞ்சினுடன் புதிய எண்டெவர் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்க்கெட் லீடரான டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட கூடுதல் சக்தியுடன் வரும் புதிய எண்டெவர் தோற்றத்திலும் மிரட்டலாக இருக்கிறது.

டிசைன்
ஃபோர்டு நிறுவனத்தின் வெற்றிகரமான ரேஞ்சர் பிளாட்ஃபார்மில் இந்த புதிய எண்டெவர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் லேண்ட்ரோவர் ப்ரீலேண்டர் 2 எஸ்யூவியையும், சி பில்லருக்கு பின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கிராஸ் பில்லர் போன்றே டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய எஞ்சின்
புதிய எண்டெவரில் தற்போது 2.5 லிட்டர் டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய எண்டெவர் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வரும் என தெரிகிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களிலும் வர இருக்கிறது.

பவர்
தற்போது 2.5 லிட்டர் டீசல் மாடல் 141 பிஎச்பி ஆற்றல் கொண்டதாகவும், 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 154 பிஎச்பி ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக பொருத்தப்பட இருக்கும் 2.2 லிட்டர் எஞ்சின் 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஃபார்ச்சூனரைவிட பவர்ஃபுல்
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி தற்போது 170 பிஎச்பி ஆற்றல் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனையாகிறது. இதைவிட பவர்ஃபுல் எஸ்யூவியாக ஃபோர்டு எண்டெவர் வர இருக்கிறது.

வசதி
லேண்ட்ரோவர் எஸ்யூவிகளில் இருப்பது போன்று, டெர்ரெய்ன் செலக்டார் என்ற வசதியும் இதில் இருக்கும். இதன்மூலம், சாலைநிலைகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன், எஞ்சின் மற்றும் பிரேக்கிங் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








