புதிய ஃபிகோ அடிப்படையிலான காம்பெக்ட் செடான் சோதனை!

By Saravana

புதிய ஃபிகோ கான்செப்ட் காரை சமீபத்தில் ஃபோர்டு அறிமுகம் செய்தது. பிரேசிலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் 2015ல் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஃபிகோ அடிப்படையிலான காம்பெக்ட் செடான் மாடலையும் ஃபோர்டு தயாரித்துள்ளது.

இந்த காம்பெக்ட் செடான் தற்போது அமெரிக்காவில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கிளாசிக் செடான் காருக்கு மாற்றாக வர இருக்கும் இந்த புதிய என்ட்ரி லெவல் செடான் கார் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 டெட்ராய்டில் சோதனை

டெட்ராய்டில் சோதனை

டெட்ராய்ட் புறநகர் பகுதியில் வைத்து இந்த புதிய செடான் கார் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலைியில் சோதனை செய்யப்பட்ட இந்த காரின் சோதனையின்போது எடுக்கப்பட்ட படங்களை TheTruthAboutCars என்ற தளம் வெளியிட்டுள்ளது.

 காம்பெக்ட் செடான்

காம்பெக்ட் செடான்

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஃபிகோ அடிப்படையிலான இந்த காம்பெக்ட் செடான் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.

அறிமுகம்?

அறிமுகம்?

2015ம் ஆண்டு துவக்கத்தில் புதிய ஃபிகோ ஹேட்ச்பேக் காரும், அதனைத் தொடர்ந்து இந்த புதிய காம்பெக்ட் செடான் காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சனந்த்தில் உற்பத்தி

சனந்த்தில் உற்பத்தி

குஜராஜ் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் ஃபோர்டு நிறுவனம் அமைக்க இருக்கும் புதிய கார் தொழிற்சாலையில் இந்த புதிய செடான் கார் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஃபிகோ மற்றும் இந்த புதிய காம்பெக்ட் செடான் கார்களில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் என தெரிகிறது. இதுதவிர, 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2013, 12:24 [IST]
English summary
US auto major Ford Motors is planning to launch a small entry level sedan that is based on the Ford Figo. It looks like the company has been working on the entry level sedan that is targeted to emerging markets like Brazil and India.
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+