ஜெர்மனியில் புதிய ஃபோர்டு ஃபிகோ சோதனை
ஜெர்மனியில் புதிய காம்பெக்ட் ஹேட்ச்பேக் காரை ஃபோர்டு சோதனை செய்து வருகிறது. பி-562 என்ற குறியீட்டு பெயரில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய கார்தான் 2014ம் ஆண்டு புதிய ஃபிகோ மாடலாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குஜராத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஆலையில் ஃபோர்டு நிறுவனம் முதலாவதாக உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கும் காரும் இதுதான் என்று கூறப்படுகிறது.
அடையாளங்களை மறைத்து சோதனை செய்யப்பட்ட அந்த காரை ஐரோப்பிய இணையதளம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டின் டிசைன் தாத்பரியங்களில் சிலவற்றுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈக்கோபூஸ்ட் எஞ்சினை டர்போசார்ஜர் இல்லாமல் இந்த காரில் பொருத்தி அறிமுகப்படுத்தவும் ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, இந்த புதிய ஹேட்ச்பேக் காரின் காம்பெக்ட் செடான் மாடலையும் அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அந்த காம்பெக்ட் செடான் அறிமுகம் செய்யப்பட்டால் ஹோண்டா அமேஸ், டாடா இண்டிகோ இசிஎஸ் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். கிளாசிக் செடான் காருக்கு மாற்றாக வரலாம் என்றும் கூறப்படுகிறது.



Image Source: Quatro rodas


Click it and Unblock the Notifications








