இணையதளங்களில் வெளியான புதிய ஃபோர்டு ஃபிகோ கான்செப்ட் படங்கள்

By Saravana

அடுத்த தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கான்செப்ட் காரின் படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. தற்போதைய ஃபிகோவுக்கு மாற்றாக முற்றிலும் புதிய வடிவமைப்பில் புதிய ஃபிகோ காரின் கான்செப்ட் இருக்கிறது.

ஃபோர்டு கா கான்செப்ட் என்ற இந்த கார்தான் அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய ஃபிகோ காராக இருக்கும். இந்த காரைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரேசில் டிசைன்

பிரேசில் டிசைன்

ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனத்தின் பிரேசில் நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வடிவமைத்துள்ள இரண்டாவது கார் மாடல் இதுவாகும்.

கான்செப்ட்

கான்செப்ட்

கான்செப்ட் மாடலான இந்த படத்தில் உள்ள காருக்கும் தயாரிப்பு நிலை மாடலுக்கும் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில், இடம்பெற்றிருக்கும் பல அம்சங்கள் தயாரிப்பு நிலை மாடலில் இருக்காது.

 கிரில் ஸ்டைல்

கிரில் ஸ்டைல்

இந்த காரின் முக்கிய அம்சமாக முன்புற கிரில்லை கூறலாம். புதிய ஃபியஸ்ட்டா செடான் காரைத் தொடர்ந்து இந்த காரிலும் அஸ்டன் மார்ட்டின் ஸ்டைல் கொண்ட கிரில்லுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோற்றம்

தோற்றம்

தற்போது விற்பனையில் இருக்கும் ஃபோர்டு ஃபிகோ காரின் டிசைனுக்கும் புதிய ஃபிகோ காரின் டிசைனுக்கும் அதிக சம்பந்தம் இல்லாத வகையில் இருக்கிறது கான்செப்ட் மாடல். ஹெட்லைட், கிரில், பின்புற தோற்றம் என அனைத்தும் புதிய காராகவே மாற்றியுள்ளது ஃபோர்டு.

 உற்பத்தி?

உற்பத்தி?

அடுத்த ஆண்டு மத்தியில் பிரேசிலில் உள்ள ஃபோர்டு ஆலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா உள்பட சர்வதேச அளவில் இந்த கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

Images: Novidadesautomotivas.blog.br

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2013, 11:15 [IST]
English summary
After countless spyshots and reports of the next generation 2015 Ford Ka (which is also the 2015 Ford Figo), press shots of the concept have leaked on the internet.
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+