இந்தியாவில் புதிய ஃபோர்டு மஸ்டாங் அறிமுகமாவதில் சந்தேகம்?
கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியா வருவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபோர்டு மஸ்டாங் கார் 1979ம் ஆண்டுக்கு முன்னர் சில ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 6ம் தலைமுறை மஸ்டாங் காரை சமீபத்தில் ஃபோர்டு அறிமுகம் செய்தது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாக ஃபோர்டு தெரிவித்தது.
எனவே, இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனைக்கு வராது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விற்பனைக்காக ஃபோர்டு தயாரித்துள்ள 110 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லையாம். அதேநேரத்தில், வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளதாக ஆட்டோஎவொலியூஷன் என்ற பிரபல ஆட்டோமொபைல் இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் நம் நாட்டு பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








