வரும் 25ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி அறிமுகம்: அதிகாரப்பூர்வ தகவல்!
வரும் 25ந் தேதி புதிய ஹோண்டா சிட்டி அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்காக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் புதிய கார் அறிமுகத்தை சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த புதிய சிட்டி கார் சர்வதே அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.அசத்தலான டிசைன் மற்றும் டீசல் மாடலிலும் வருவதாக வெளியான தகவல்களால் புதிய ஹோண்டா சிட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

நாடு முழுவதும் பல ஹோண்டா பல டீலர்களில் சத்தமில்லாமல் ரகசிய முன்பதிவும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை ஜாஸ் கார் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோண்டா சிட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் முறைப்படி விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








