அமேஸ், டிசையரைவிட குறைவான விலையில் வருகிறதா புதிய ஹூண்டாய் செடான்?
மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் காம்பெக்ட் செடான் கார்களைவிட குறைவான விலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் செடான் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காம்பெக்ட் செடான் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. டிசையரைத் தொடர்ந்து தற்போது அமேஸ் காரும் இதனை மெய்ப்பித்து வருகிறது.

இந்த நிலையில், விற்பனை நிறுத்தப்பட்ட ஆக்சென்ட் கார் இடத்தை நிரப்பும் வகையில், பஹூண்டாய் நிறுவனமும் புதிய காம்பெக்ட் செடான் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கிராண்ட் ஐ10 காரின் அடிப்படையில்தான் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமேஸ் போன்றே இந்த காரின் பின்புறமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்கள் வலுவான மார்க்கெட்டை பிடித்துள்ளன.
வாடிக்கையாளர்களை கவர்ந்து மார்க்கெட்டை பிடிக்கும் விதமாக தனது புதிய காம்பெக்ட் செடானை போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
ரூ.4.9 லட்சத்தில் ஹூண்டாயின் புதிய காம்பெக்ட் செடான் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. பிப்ரவரி 4ந் தேதி இந்த புதிய செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








