அசத்தலான புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்திய நிசான்: இந்தியா வர வாய்ப்பு
இரண்டாம் தலைமுறை நிசான் கேஷ்கி கிராஸ்ஓவர் இங்கிலாந்தில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட எஞ்சின், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனையில் பல மைல்கற்களை கடந்த இந்த புதிய எஸ்யூவி தற்போது புதிய தலைமுறை அம்சங்களுடன் வரும் பிப்ரவரி மாதம் முதல் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

கொஞ்சம் பெரிசு
தற்போதைய கேஷ்கியைவிட புதிய மாடல் நீளத்தில் 49 மிமீ, அகலத்தில் 20 மிமீ கூட்டப்பட்டுள்ளது. உயரம் 15 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பயணிகளுக்கான ஹெட்ரூம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பான டிரைவிங் பொசிஷன் கொண்டதாக இருக்கும் என நிசான் தெரிவிக்கிறது. 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. புதிய எக்ஸ் ட்ரெயில் சாயல் இருந்தாலும், மிகச்சிறப்பாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது.

எடை குறைப்பு
முந்தைய மாடலைவிட 40 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த கார்பன் புகையை வெளியிடும் அம்சங்களை கேஷ்கி கொண்டுள்ளது.

எஞ்சின்
115 பிஎச்பி ஆற்றல் கொண்ட 1.2 லி டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 150 பிஎச்பி பவர் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர, 110 பிஎச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 130 பிஎச்பி பவர் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சினுடனும் கிடைக்கும். அனைத்து எஞ்சின்களும் டர்போ சார்ஜர் பொருத்தப்பட்டவை.

டிரான்ஸ்மிஷன்
6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது புதிய எக்ஸ்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

இன்டிரியர்
இன்டிரியர் தரம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், சொகுசான ஸீரோ கிராவிட்டி இருக்கைகள் உள்ளிட்டவை கூடுதல் அம்சங்களாக இருக்கிறது.

ஆல் வீல் டிரைவ்
புதிய கேஷ்கி எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
முன்புற மோதல், சிக்னல் அடையாளம் காணுதல், லேன் மாறுதல், சாலையில் வரும் பொருட்களை இனம் கண்டு மோதலை முன்கூட்டி எச்சரிக்கும் நிசானின் சேஃப்டி ஷீல்டு சிஸ்டம் இருப்பது மிக முக்கிய பாதுகாப்பு அம்சம்.

முன்புற மோதல், சிக்னல் அடையாளம் காணுதல், லேன் மாறுதல், சாலையில் வரும் பொருட்களை இனம் கண்டு மோதலை முன்கூட்டி எச்சரிக்கும் நிசானின் சேஃப்டி ஷீல்டு சிஸ்டம் இருப்பது மிக முக்கிய பாதுகாப்பு அம்சம்.
பூட் ரூம் 430 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இருக்கைகளை மடக்கி விரிக்க முடியும் என்பதால் கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உதவும்.

எதிர்பார்க்கும் விலை?
விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. 16,895 பவுண்ட் முதல் 27,650 பவுண்ட் விலையில் இந்த புதிய கேஷ்கி எஸ்யூவி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு?
இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதக அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, நிசானின் உயரதிகாரி ஆண்டி பால்மர் ஏற்கனவே சூசகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








