2020 வரை இதே பான்டம்தான்.. ரோல்ஸ்ராய்ஸ் கூறும் நியாயமான காரணம்

By Saravana

மொபைல்போன் மார்க்கெட்டுக்கு அடுத்தாக ஆட்டோமொபைல் துறையில்தான் அதிக அளவில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் நிகழ்வு நித்தமும் நடந்து வருகிறது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல் என மாதத்தில் பாதி நாள் கார் மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இடையில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வேறு அறிமுகம் செய்யப்படுகின்றன.

மார்க்கெட் பங்கை தக்க வைத்துக் கொள்ளவும், போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை கவரவும் கார் நிறுவனங்களுக்கு வேறு வழியுமில்லை. ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் இந்த விஷயத்தில் மிக தெளிவான கண்ணோட்டத்தில் இருக்கிறது. 2020ம் ஆண்டு வரை பான்டம் கார் விற்பனை தொடரும் என்று ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது. அதுவரை புதிய பான்டம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ரோல்ஸ்ராய்ஸ் கூறும் காரணம் நியாயமானதே.

பான்டம் அறிமுகம்

பான்டம் அறிமுகம்

பிஎம்டபிள்யூ கையில் ரோல்ஸ்ராய்ஸ் வந்த 2003ம் ஆண்டில் பான்டம் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 2012ல் புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு, இருக்கை டிசைனில் மாற்றங்களுடன் வந்தது. மியூசிக் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டது. தற்போது பான்டம் சீரிஸ் 2 என்ற பெயரில் விற்பனையாகிறது.

வாடிக்கையாளர் மதிப்பு

வாடிக்கையாளர் மதிப்பு

17 ஆண்டுகள் வரை விற்பனை செய்யும் திட்டத்துடனே பான்டம் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளை கடந்துவிட்டது. குறுகிய கால இடைவெளியில் புதிய மாடலை அறிமுகம் செய்தால், முந்தைய வாடிக்கையாளர்கள் தங்களது காரை சீக்கிரமாகவே பழைய மாடலாகிவிட்டதே என்று கருதும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவேதான் உடனுக்குடன் அறிமுகத்தை தவிர்க்கிறோம் என்கிறார். நியாயம்தான்!

இரட்டிப்பு ஆயுள்

இரட்டிப்பு ஆயுள்

சாதாரண கார்களை முறையாக பராமரித்தால் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறந்த ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் ஆயுட்காலம் இதைவிட இருமடங்கு கூடுதலாக இருக்கின்றன. எனவே, காரை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால், ரோல்ஸ்ராய்ஸ் வாடிக்கையாளர்கள் புதிய கார் மாடல் வரும் வரை பழைய காரை வைத்து ஓட்ட முடியும். வேறு பிராண்டையும் நினைத்து பார்க்க அவசியம் இல்லை.

 விலை

விலை

இந்தியாவில் கஸ்டமைஸ் வசதிகள் சேர்த்து அதிகபட்சமாக ரூ.7 கோடியாகிறது பான்டம் கார். எனவே, 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் கார்களை மாற்றுவது போன்று இதில் சாத்தியமில்லை என்பதும் ஒரு காரணம்.

அடுத்த தலைமுறை மாடல்

அடுத்த தலைமுறை மாடல்

2020ல்தான் புதிய பான்டம் அல்லது புதிய மாற்று கார் மாடல் அறிமுகம் செய்யப்படும். இந்த கார் பிஎம்டபிள்யூவின் 7ம் தலைமுறை மாடலின் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட உள்ளது. அதுவரை, இதே பான்டம்தான் விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2013, 18:27 [IST]
English summary
British luxury carmaker Rolls Royce has no plans to bring a facelift version Phantom in near future. The Phantom series will last in the global markets for over 6 years now and the new Phantom facelift is expected only after 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+