இந்த ஆண்டு ரிலீசாகும் எஸ்யூவி, சொகுசு கார் மாடல்கள் - தொகுப்பு

2013ல் அறிமுகமாக இருக்கும் ஹேட்ச்பேக், செடான் கார்கள் பற்றிய தகவல்களை முதல் தொகுப்பில் வழங்கினோம். இந்த நிலையில், நடப்பாண்டில் வருகை தர இருக்கும் புதிய எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களின் விபரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இதில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஃபோர்ஸ் குர்கா ஜீப் மற்றும் பென்ஸ் ஏ கிளாஸ், ஜாகுவார் எஃப் டைப் ஆகிய கார்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்கள். அவற்றின் விபரங்களையும் இந்த தொகுப்பில் வழங்குகிறோம்.

வரிசைகட்டும் புதிய எஸ்யூவி மாடல்கள்

வரிசைகட்டும் புதிய எஸ்யூவி மாடல்கள்

எஸ்யூவி, சொகுசு மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதோடு போட்டியும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், பல புதிய மாடல்கள் இந்த இரண்டு செக்மென்ட்டிலும் அறிமுகமாக இருக்கின்றன.

ஆடி எஸ் 5

ஆடி எஸ் 5

பெர்ஃபார்மென்ஸில் புகழ்பெற்ற ஆடியின் எஸ் வரிசையில் வருகிறது எஸ்-5 செடான். 329 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டு மத்தியில் வர இருக்கும் இந்த கார் ரூ.75 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமாக உள்ளது.

ஃபோர்ஸ் குர்கா ஜீப்

ஃபோர்ஸ் குர்கா ஜீப்

எஸ்யூவி கார்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் குர்கா ஜீ்ப்பை களமிறக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு தகுதியான மாடல் இது. 2.2 லிட்டர் எஞ்சினுடன் வரும் குர்கா அதிகபட்சம் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எஸ்யூவியாக வருகிறது. இந்த ஆண்டு மத்தியில் மார்க்கெட்டுக்கு வருகிறது.

ஃபோர்ஸ் எம்பிவி கார்

ஃபோர்ஸ் எம்பிவி கார்

பென்ஸ் வயானோ எம்பிவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட புதிய எம்பிவி காரை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்ஸ் மோட்டார்ஸ். 139 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.14 லட்சம் விலையில் இந்த புதிய எம்பிவி வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்த ஆண்டில் அறிமுகமாகும் முக்கிய கார் மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வரும் இந்த புதிய எஸ்யூவியில் 123 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சின் மற்றும் 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சத்திற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது.

ஹோண்டா சிஆர்-வி

ஹோண்டா சிஆர்-வி

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய சிஆர்-வியை ஹோண்டா விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஆனால், டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்படாது என்பது ஏமாற்றம். 185 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் எஞ்சின் மற்றும் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினுடன் 2 விதமான பெட்ரோல் மாடல்களில் வருகிறது. புதிய சிஆர்-வி ரூ.26 லட்சம் விலையில் அறிமுகமாக இருக்கிறது.

ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்

ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்

ஜாகுவாரின் புத்தம் புதிய எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் காரை இந்த ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்துகிறது டாடா மோட்டார்ஸ். கன்வெர்ட்டிபிள் மாடலில் மட்டுமே கிடைக்கும். 335 பிஎச்பி மற்றும் 375 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 488 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். ஒரு கோடி விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கிராண்ட் ஜீப் கெரோக்கீ

கிராண்ட் ஜீப் கெரோக்கீ

ஃபியட்டின் அங்கமாக செயல்படும் அமெரிக்க பிராண்டான ஜீப் இந்த ஆண்டு இறுதியில் இந்திய மார்க்கெட்டில் நுழைகிறது. முதலாவதாக, கெரொக்கீ பிரிமியம் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 237 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது. இந்தியாவிலேயே இந்த எஸ்யூவியை அசெம்பிள் செய்ய ஃபியட் முடிவு செய்துள்ளதால் ரூ.40 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

மாருதி மினி எஸ்யூவி

மாருதி மினி எஸ்யூவி

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த எக்ஸ்ஏ ஆல்ஃபா மினி எஸ்யூவியை இந்த ஆண்டு இறுதியில் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மாருதி தீவிரப்படுத்தியிருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வருகிறது. 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த மினி எஸ்யூவி ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பி கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை தொடர்ந்து அடுத்து தனது ஏ-கிளாஸ் காரை இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ். 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொண்டதாக வரும் இந்த கார் சொகுசு கார் மார்க்கெட்டிலேயே குறைந்த விலை காராக இருக்கும். ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்குள் வர இருப்பதால் பெரும் வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்.

நிசான் எஸ்யூவி(டஸ்ட்டர் ரீபேட்ஜ் மாடல்)

நிசான் எஸ்யூவி(டஸ்ட்டர் ரீபேட்ஜ் மாடல்)

பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ரெனோ டஸ்ட்டரை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது நிசான். 1.6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டிருக்கும். டீசல் மாடல் இரண்டு வித சக்தியை வெளிப்படுத்தும் மாடல்களில் கிடைக்கும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ

ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ

போலோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட புதிய மினி எஸ்யூவியை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கிராஸ்ஓவர் ரக காரை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு விட இருக்கிறது.

 வால்வோ வி10 கிராஸ் கன்ட்ரி

வால்வோ வி10 கிராஸ் கன்ட்ரி

வால்வோவின் குறைந்த விலை காராக மார்ச்சில் அறி்முகமாக இருக்கிறது வி40 கிராஸ் கன்ட்ரி. 163 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய காரை வால்வோ அறிமுகப்படுத்துகிறது. சொகுசு மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்க வரும் இந்த புதிய கார் ரூ.30 லட்சம் ஆரம்ப விலையில் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 5, 2013, 15:32 [IST]
English summary
The year 2013 will see several new SUVs and luxury cars being launched in India. Here is a detailed list of all upcoming SUVs and luxury cars for 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+