புதிய ஆக்டாவியா மீது ஸ்கோடாவின் நம்பிக்கை வீண்போகவில்லை!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மூன்று வாரங்களில் புதிய ஸ்கோடா ஆக்டாவியா காருக்கு இதுவரை 1,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 3ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஆக்டாவியா டிசைன், வசதிகள், இடவசதி என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

விற்பனைக்கு வந்த நாளில் 500 முன்பதிவுகளுடன் தெம்பாக இறங்கிய ஆக்டாவியாவுக்கு தற்போது முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனர் பாவெல் சூப்ளாக் கூறுகையில்," வாடிக்கையாளர்களிடம் புதிய ஆக்டாவியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.
இந்த புதிய மாடலின் மூலம் எங்களது பிராண்டு மீதான நம்பிக்கையும், நன்மதிப்பும் அதிகரித்துள்ளது. எனவே, இதுபோன்ற தயாரிப்புகளை எதிர்காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஆக்டாவியா 1.4 லிட்டர், 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 2.0 லிட்டர் டீசல் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய ஆக்டாவியா ரூ.13.95 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








