நிசான் கார்களை ஆன்லைனில் வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்!!

By Saravana

நிசான் கார்களை ஆன்லைனில் வாங்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்றைய நிலையில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பல்வேறு தகவல்களை திரட்டிய பின்னரே ஷோரூமுக்கு செல்கின்றனர்.

Nissan Terrano

மேலும், காரை பற்றிய விபரங்கள் மற்றும் வசதிகளை தெரிந்து கொள்வதோடு, எந்த வேரியண்ட்டை வாங்க வேண்டும் என்ற முக்கிய முடிவு வரை ஆன்லைன் மூலமாகவே எடுத்துவிடும் அளவிற்கு இன்று வசதிகள் நிறைந்து இருக்கின்றன.

இதன்மூலம், அலைச்சல், நேரம் மிச்சமாகிறது. இந்தநிலையில், கார்களின் விபரங்களை ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் கொண்டு புதிய வசதியை நிசான் அறிமுகம் செய்ய உள்ளது.

சில ஆட்டோமொபைல் இணையதளங்கள் இந்த சேவையை ஏற்கனவே வழங்கி வருகின்றன. அவற்றுடன் இணைந்து இந்த புதிய வசதியை அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது. அனைத்து நிசான் கார்களையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து டெலிவிரி பெறும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக நிசான் கார் விற்பனையை ஏற்று நடத்தி வரும் ஹோவர் ஆட்டோமோட்டிவ் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாகவும், அதேவேளை சேவையில் எவ்வித சமரசமும் இல்லாமல் மிகச்சிறப்பாக இந்த வசதியை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஹோவர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் துறை இயக்குனர் நிதிஷ் டிப்னிஸ் தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2013, 14:30 [IST]
English summary
Purchasing cars via the internet, is quickly being adopted by a few manufacturers from around the world. The newbie to this group is Nissan India, who would soon make its entire product line available for purchase via the internet.
மேலும்... #nissan #four wheeler #நிசான்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+