2015ல் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை நிசான் ஜிடி ஆர்

By Saravana

அடுத்த தலைமுறை ஜிடி ஆர் காரை அறிமுகம் செய்வதை ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் உறுதிப்படுத்தியிருக்கிறது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதல் பல உயர்ரக மற்றும் விலையுயர்ந்த கார்களுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

டிசைன், பெர்ஃபார்மென்ஸ் என்று அனைத்து வகையிலும் தனது மதிப்பை இழக்காமல் தொடர்ந்து வாடிக்கையாளர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஜிடி ஆர் காரின் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

Nissan GT R

ஆம், பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய டிசைனில் அடுத்த தலைமுறை ஜிடி ஆர் காரை வடிவமைக்கும் பணிகளில் நிசான் தீவிரமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடந்த நிசான் 360 விழாவில் புதிய ஜிடி ஆர் காரின் வரவை நிசான் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், அதுபற்றிய கூடுதல் தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை. 2015ம் ஆண்டு மத்தியில் புதிய ஜிடி ஆர் முதன்முறையாக தரிசனம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016ல் விற்பனைக்கு வர இருக்கிறது. எதிர்காலத்தில் ஹைபிரிட் ஜிடி ஆர் காருக்கும் வாய்ப்பு இருக்கிறதாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2013, 17:29 [IST]
English summary
At the recently held Nissan 360 global press event held in California, a Nissan representative revealed to Motor Trend that the all new GT-R will be a 2016 model year in no uncertain terms. This would mean the new gen GT-R will be revealed at least by the latter half of 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+