எவாலியா விலை ரூ.1.15 லட்சம் குறைப்பு: நிசான் அதிரடி
விற்பனை படு மந்தமாகிவிட்டதால், எவாலியா விலையை ரூ.1.15 லட்சம் வரை நிசான் குறைத்துள்ளது. டிவிட்டரில் இந்த செய்தியை நிசான் வெளியிட்டிருக்கிறது.
கடந்த 6 மாதங்களாக நிசான் எவாலியாவின் விற்பனை படு மோசமான நிலையில் உள்ளது. மாருதி எர்டிகா மற்றும் செவர்லே என்ஜாய் கார்களால் வேறு பலத்த நெருக்கடி.

இதனால், மாதத்திற்கு 200 என்ற அளவிற்கு எவாலியாவின் எண்ணிக்கை சுருங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை நிசான் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் செய்தியில் எவாலியாவை ரூ.7.99 லட்சம் என்ற சிறப்பு விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்துவதற்காக நிசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறோம். பதில் கிடைத்தவுடன் உறுதிப்படுத்துகிறோம். நிசான் எவாலியா 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








