கூகுள் ஆன்லைன் ஷாப்பிங்கில் நிசான் கார்களை முன்பதிவு செய்தால் தள்ளுபடி
கூகுள் நடத்தும் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் நிசான் கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்பு சலுகைகளை பெறலாம் என்று நிசான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே நடந்த இந்த கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா இந்த ஆண்டு 3 நாட்கள் நடக்கிறது. நேற்று துவங்கிய இந்த ஷாப்பிங் திருவிழா நாளை வரை நடக்கிறது.

ஆன்லைன் மூலம் கார்களை விற்பனை செய்ய இருப்பதாக நிசான் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்த நிலையில், இந்த ஆன்லைன் கொள்முதல் திருவிழாவில் நிசானும் இணைந்துள்ளது. மேலும், இந்த ஷாப்பிங் திருவிழாவில் 200 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் சிறப்பு தள்ளுபடிகளுடன் விற்பனை செய்கின்றன.
நிசான் கார்களை வாங்குவதற்கு www.nissan.in/gosf என்ற இந்த இணைய தள முகவரியில் சென்று நிசான் கார்களை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை பெறலாம்.
எவாலியாவுக்கு ரூ.2.30 லட்சம், மைக்ராவுக்கு ரூ.40,000, நிசான் டெரானோவுக்கு ரூ.10,000, மைக்ரா ஆக்டிவ் காருக்கு ரூ.15,000, டீனா காருக்கு ரூ.5.60 லட்சம் என இந்த சேமிப்பு பட்டியல் நீள்கிறது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் கார்களை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








