உலகின் அதிக முடுக்கு விசை கொண்ட காரை களமிறக்கும் நிசான்!
சூப்பர் கார் போன்றே பெர்ஃபார்மென்ஸ் கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக நிசான் ஜிடி ஆர் பெயர் பெற்றுள்ளது. சூப்பர் கார் விலையுடன் ஒப்பிடும்போது மிக குறைவான விலையுடன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காராக கிடைப்பதால், உலக அளவில் இந்த ஜப்பானிய ஸ்போர்ட்ஸ் காருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜிடி ஆர் காரை பல்வேறு சிறப்பு பதிப்புகளில் நிசான் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவினரை கவரும் வகையில் இருக்கும். இதையெல்லாம் தாண்டி தற்போது ஜிடி ஆர் காரின் பெர்ஃபார்மென்ஸ் எடிசனா நிஸ்மோ என்ற புதிய பதிப்பை விரைவில் வெளியிடுகிறது நிசான்.

தற்போதைய ஜிடிஆர் கார் 0-100 கிமீ வேகத்தை 2.7 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. ஆனால், அதைவிட வெறும் 2 நொடியில் 0- 96 கிமீ வேகத்தை எட்டும் விதத்திலான ஜிடிஆர் காரை நவம்பரில் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த உள்ளதாக நிசான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

புதிய ஜிடிஆர் காரில் எடை குறைப்பு தொழில்நுட்பம் கையாளப்பட்டிருக்கும். அத்துடன் பிரத்யேக டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நிசான் ஜிடிஆர் கார் 0-96 கிமீ வேகத்தை 2 நொடியில் தொட்டுவிடும் ஆற்றல் கொண்டதாக அறிவிக்கப்பட்டால், உலகின் அதிக முடுக்கு விசை கொண்ட கார் என்ற பெருமையை புகாட்டி வேரோனிடமிருந்து பறித்துக்கொள்ளும். 1200எச்பி திறன் கொண்ட புகாட்டி வேரோன் கார் 0-96 கிமீ வேகத்தை 2.5 நொடியில் தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








